Header Ads



ஒரு அணியாக போட்டியிடுவதன் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பிரதிநிதியை பெறமுடியும்

(பா.சிகான்)

பொதுச்சின்னத்தில் ஒரு அணியாக போட்டியிடவதன் மூலம்தான் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லீம்கள் பிரதிநிதித்துவம்  பெற கூடியதாக உள்ளது என யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் சுபியான் மௌலவி தெரிவித்தார்.

வடமாகாண சபையில் பிரதிநிதித்துவமொன்றினை பெறுவது தொடர்பாக அண்மையில் மக்கள் மறுமலர்ச்சி முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ந நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வட மாகாண தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதாயின் தற்போது 2012 ம் ஆண்டு  வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு இப்பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதானது முயற்கொம்பிற்கு ஒப்பாகும். பல கட்சிகள் இத்தேர்தலில் இறங்குவதனால் தற்போது உள்ள வாக்குகள் பிரிந்துவிடும். இதனால் எந்நக்கட்சியும் பிரதிநித்துவத்தை பெற முடியாது போய்விடும். எனவே தான் சகல அபேட்சகர்களும் கட்சி வேறுபாடின்றி ஒரு பொதுச்சின்னத்தில் சுயேட்சை அணியாக இறங்கினால் வாக்குகள் பிரியாமல் பாதுகாக்கப்படுவதுடன் அபேட்சகர்கள் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க கூடிய வகையில்  ஏனைய சமூக வாக்காளர் வாக்குகளையும் கவர முயற்சிக்கலாம்.

இவ்வாறாக முயல்வதால் தான்பொது அணியின் வெற்றியினை உறுதிப்படுத்தலாம்.மேலும் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்ச  மாவட்ட முஸ்லீம்கள் இதற்கான நடைமுறைச்சாத்தியமான சகல வழிகளையும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.