மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல்
((பி.எம்.எம்.எ. காதர் + ஏ.எம்.எம்.றியாத்)
கல்வி அமைச்சின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் வைபவமும் இப்தார் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கௌரவ அதிதியாகவும் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment