புனரமைக்கப்பட்ட தர்காநகர் ஜும்ஆப் பள்ளிவாசலை ஜனாதிபதி மஹிந்த திறந்து வைக்கிறார்
(ஏ.எல்.ஜுனைதீன்)
புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள தர்கா நகர் ஜும்ஆப் பள்ளிவாசல் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படும் என பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இரண்டாவதாக நிர்மாணிக்கப்பட்ட பெருமையைக் கொண்ட இப் பள்ளிவாசல் நவீன முறையில் புனரமைப்புச் செய்யப்பட்ட பின்னர் முதலாவது குத்பா பிரசங்கத்தை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா உப தலைவரும் பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) நிகழ்த்துவார்.
காலையில் நடைபெறும் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி, அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் நிர்மல கொத்தலாவல, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், எம்.எஸ்.எம் அஸ்லம் உட்பட மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்றும் மேற்படி பள்ளிவாசல் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)
அமைச்சர்களான அதா,ஹக்கீம் ,ரிசாத் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு இல்லையா....????
ReplyDeleteWill the media grace this occasion in front pages? Will this stop BBS
ReplyDeleteanti-muslim campaign?Can this change growing anti-muslim
sentiments inflamed by the Buddhist extremists? I seriously
doubt it.
தொரந்தும் வக்கிறே மூடவும் எத்தனிக்கிறே
ReplyDeleteஎன்ன வேல செய்ராங்களோ அஸ்வருக்குத்தான் தெறியும்.
அந்த கத ஓகே,, ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவு திறக்கும், என்பார்கள் எமது நாட்டில் ஒன்பது ஜும் ஆ பள்ளி மூடி ஒரு ஜும் ஆ பள்ளி ஒபேனா ,,, என்ன இது , உலகம் ????
ReplyDelete