மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மெவன் சில்வா நியமனம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நேற்று செவ்வாய்கிழமை முதல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி எஸ்.எஸ்.பி.அஜந்த சமரகோன் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இட மாற்றம் பெற்று சென்றதை அடுத்தே அவரின் வெற்றிடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் பதவியுயர்வு பெற்று மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டடுள்ளார்.
புதிய மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்;தியட்சகராக கடமையேற்றுள்ள எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று செவ்வாய்கிழமை சுப நேரத்தில் மட்டக்களப்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடமையேற்றார்.


Post a Comment