முஸ்லிம் சமூகத்தின் குடும்பவியல் நிலை (பகுதி - 2)
(எஸ்.எல். மொஹமட் இம்தியாஸ் - நளீமி)
இவ்விடயம் சம்பந்தமாக பல வகையான தலாக் சம்பவங்கள் நிகழ்கின்றன.
1. இளம் வயது யுவதிகள் கவர்ச்சிகரமான ஏமாற்று வார்த்தைகளை நம்பி வீட்டைவிட்டும் தமது உறவினர்களைத் துறந்தும் திருமணம் முடித்து பின்னர் தான் ஏமாற்றுப்பட்டதை தனது கணவனின் உண்மையான சுயரூபம் விளங்கப்பெற்று வேறுவழியின்றி (குல்உ) திருமணபந்தத்தைமுறிக்கின்றனர்.
2. திருமணம் முடித்தவர்கள் தமது கணவனிடம் திருப்திபெறாத நிலையில் ஏனைய ஆடவருடன் தொடர்பு கொள்வதன் மூலமாக அவர்களின் அரவணைப்பையும், அன்பான வார்த்தைகளையும் நம்பி சரணகதி அடைந்து தனது கணவனை, தனது குடும்பத்தை விட்டுச்செல்கின்றனர்.
இந்த நாட்டிலே அடுத்த சமூகங்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்களிடம்தான் அதிக தலாக் நடைபெறுகின்றது என அந்நியர்கள் கூறுமளவிற்கு, அவர்கள் எம்மை அடையாளம் காணுமளவிற்கு எமது குடும்பவியல் விடயத்தில் நாம் மோசமான விளைவை எட்டியிருக்கன்றோம் என்றால் எமது முன்மாதிரி எங்கே? எமது சமூக மேம்பாடு குறித்து ஒரு கனம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அதிகரித்து வரும் தலாக் பிரச்சினையை குறைப்பதற்கான சில முன்மொழிவுகள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, நம்பிக்கையாளர் சபை, பிராந்திய ரீதியில் இயங்கும் ஜம்இய்யதுல் உலமா பள்ளிவாயில் நிருவாகிகளின் பணிகள்.
பிராந்திய ரீதியில் இயங்கும் ஜம்மியதுல் உலமா நம்பிக்கையாளர் சபைஇ மஜ்லிஸ் அச் சூரா, மூன்றும் இணைந்து ஒவ்வொரு பள்ளிவாயல் நிர்வாகிகளையும் அழைத்து இது பற்றிய தெளிவூட்டல் சொற்பொழிவுகளையும் கருத்தரங்குகளையும் தொடர்தேர்ச்சியாக நடாத்த ஏற்பாடுகள் செய்தால் மக்களுக்கு திருமணத்தின் முக்கியத்துவம், குடும்பவியலின் தாற்பரியம், அதன் சிறப்புக்கள் பற்றிய போதுமான விளக்கத்தை வழங்க முடியும். இதனால் குடும்பவியல் பற்றிய சரயான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். இவை எல்லாவற்றையும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நேரடி கண்காணிப்பின் கீழும் அவர்களின் அனுசரணையோடு இலங்கையில் பல பாகங்களிலும் ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தில் மேலோங்கிக் காணப்படும் தலாக் பிரச்சினைக்கான தீர்வினை காண முடியும்.
இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகள்.
இந்த நாட்டிலே பல ஜமாத்களாலும் முஸ்லிம் சமூக மேம்பாடு குறித்து பரவலாக எழுதப்பட்டு பேசப்பட்டு வருகின்றது. அரசியல் எழுச்சி, கல்வி ரீதியான முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, தனியார் ஊடகத்தின் தேவை என்றவாறு பல கவர்ச்சிகரமான தலைப்புக்களில் நவீன பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டு கட்சிதமாக செயற்படுத்தி வருகின்றன. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம்தான். எனினும் இது எல்லாவற்றிற்கும் அடித்தளமாக, ஆணிவேராக விளங்கும் குடும்ப அமைப்பின் உருதிப்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள்,முயற்சிகள் ஒப்பீட்டளவில் போதியளவு இடம்பெறுவதாகத் தெரியவில்லை.
இன்று முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியிருக்கின்றது. ஆனால் அதற்குரிய காரணத்தை ஆராய்ந்தபோது கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவனின் பெற்றோர் சீரான குடும்வியல் அமைப்பை ஏற்படுத்தவில்லை. இருவருக்கும் மத்தியில் தொடரான பிரச்சினைகள் சண்டைகள் ஏற்பட்டதை அறிய முடிகிறது. பாடசாலையில் மோசமான நடத்தையுடைய பிள்ளைகளைப் பற்றி மேற்கொண்ட ஆய்வின் முடியின்படி அவர்களில் பெரும்பான்மையானோர் விவாகரத்துப் பெற்றவர்களின் பிள்ளைகள் எனத் தெரிய வருகிறது.
பொது நிருவனங்கள், நலன்புரி அமைப்புக்களின் பணிகள்.
WAMY , YMMA போன்ற நிறுவணங்களிலும் பெண்களுக்கான கருதத்ரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் WAMY நிறுவணத்தில் colombo பிராந்திய பெண்களுக்கென இத்தலைப்பிலான செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. எனினும் இவை குறிப்பிட்ட இடங்களோடு மாத்திரம் சுருங்கிவிடாது விரிவுபடுத்தப்பட வேண்டும். இது போன்ற விரிவுரைகளை ஏனைய பொது நிருவணங்களும் ஏற்பாடு செய்வதன் மூலமாக தலாக்கினை கணிசமான அளவு குறைக்க முடியும்.
எனவே எமது சமூகத்தில் அதிகரித்து வரும் தலாக் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்குண்டு. அந்த வகையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அனுசரனையோடு காத்திரமான பல முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். Pre Marraige
Counseling Programmes பிராந்திய ரீதியாக நடாத்தப்பட வேண்டும். அத்தோடு காழிமார்கள் சற்று இருக்கமான போக்கினைக் கடைபிடிக்க வேண்டும். இயன்றவரை சேர்ந்து வாழவும் சுமூகமான முறையில் இணக்கப்பாடு காணவும் எத்தணிக்க வேண்டும். முடியாதபோது விவகாரத்துப் பெறச் செய்து பெண்களின் மறுவாழ்விற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிவாயல் நிருவாகத்திற்கு அறிக்கை செய்து உதவி ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் காழிமார்கள் பிள்ளை வளர்ப்பிற்குரிய பராமரிப்புச் செலவை அவசியம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் பெற்றுக்கொள்ள உதவ வேண்டும். இதன் மூலம் தலாக்கினால் ஏற்படும் விபரீதங்களை நிவர்த்திக்க முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஊரிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள், பொது நிருவனங்கள் என்பன தமது செயற்பாடுகளை மீள் பரிசீலினை செய்து காலத்திற்குரிய சமூகத்தில் முன்னுரிமை படுத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளை இணம்கண்டு அவற்றை தமது ஜமாத்தின் உதவியோடு மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு குடும்ப அமைப்பை தகர்த்தெரியும் தலாக் பிரச்சினைக்கு முடியுமான வரைக்கும் பல முயற்சிகள் மேற்கொள்வதினூடாக நிரந்தரமான தீர்வினைக் காண முடியும்.
.jpg)
நல்ல அழகான கட்டுரை ஒவ்வொரு முஸ்லிமும் எப்படி வாழ வேண்டும் என்று இங்கு சுற்றி காட்டபட்டுள்ளது.ஆண்களிலும் தவறுகள் இருக்கின்றன ஆனால் அதிகமாக பெண்களே கூடுதலாக தவறுகள் செய்கின்றனர்.
ReplyDeleteநல்ல மனைவி அமைவது எல்லாம் ஆயிரத்துக்கு ஒன்று தான்.சில பெண்கள் இருகின்றார்கள் அவர்கள் கலியானம் முடித்த பிறகும் தங்களின் பெற்றோர்களின் பேச்சியிலே வாழ்க்கையை கனவோரோடு செய்ய முயற்சி செய்வார்கள் இனி இலகுவாக குடும்பத்தில் பிரச்சினை உருவாகும்.கனவர் என்ன சொன்னாலும் எங்கட வாப்பா இப்படி உம்மா இப்படி என்று கணவரின் வார்த்தைகள் தட்டி கொண்டே இருப்பார்கள்.பிள்ளைகளை பெற்று எடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு சரியானம் கஷ்டம்,இப்படி எத்தனையோ மனைவிமார்களோடு பிரச்சினை.கணவரின் ஆசை தேவைகள் உணர மாட்டார்கள் ............இப்படியே எத்தனை பிரச்சினைகள் ஆனாலும் சில நல்ல மனசுக்காரன் மாப்புளைகாரர்கள் தாலகுகுக்கு செல்லாமல் பொறுமையோடு வாழ்க்கையை நடாத்தி செல்வார்கள்.
இந்த facebook குக்கு குற்றம் சாட்டுவது மிச்சம் குறைத்து கொள்ள வேண்டும்,நானும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக facebook ஐ பயன்படுத்தி வருகிறேன் ஒருநாளும் எங்கள் பெண்கள் வந்து தேவையில்லாமல் பேசி தொடர்பு கொள்ளவில்லை.