Header Ads



ஜேர்மன் கலந்துரையாடல் - கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நிலைத்து  நிற்கும்  அபிவிருத்தி  மற்றும்  நகர போக்குவரத்து  தொடர்பிலான
Rio+20  தீர்மானங்களை  நடைமுறைப்படுத்துவது  பற்றிய  உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த மாதம்  18,19,20 ம் திகதிகளில்  ஜேர்மனின்  தலைநகர்
பேர்லின்  நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில்  போக்குவரத்து  பிரதியமைச்சரின்  இணைப்புச்  செயலாளர் முஹம்மட்  சபருல்லாஹ்,  காத்தான்குடி  நகரசபையின்  நகர முதல்வர்  S.H. முஹம்மது அஸ்பர் J.P  மற்றும்  ஓட்டமாவடி  பிரதேச சபைத்  தவிசாளர்K.S.S. ஹமீட்  ஆகியோர்  கலந்து கொண்டதுடன்  39  நாடுகளின்  உள்ளூராட்சி முதல்வர்கள்  பங்குபற்றியமை  குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. இந்தப் பயணத்திற்குச் சென்ற எமது காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் வந்ததும், வராததுமாக நகர சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிராத போக்குவரத்துச் செலவைப் பெறுவதற்காக மோசடியான முறையில் தீர்மானமெடுத்ததாக ஒரு வாசகத்தை 2013/46வது தீர்மானத்திற்குள் உட்புகுத்தி கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற நகர சபையின் 42வது சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற முயற்சித்தார்.

    எனினும் 40வது கூட்டறிக்கையை உன்னிப்பாக அவதானித்த சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் இந்த 'இடைச்சொருகப்பட்ட கொடுப்பனவு கோரும் வாசகத்தை'க் கண்டு பிடித்து அதனை ஆட்சேபிக்கவே வேறு வழியில்லாமல் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

    இதுதொடர்பாக இப்பயணத்தை மேற்கொண்ட மற்றுமொரு கிழக்கு உள்ளுராட்சி மன்றத்தின் தலைவரோடு தொடர்பு கொண்டு பயணக் கொடுப்பனவுகள், ஏற்பாடுகள் பற்றி வினவியபோது அவர், தங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் 1500 அமெரிக்க டொலர்களைக் கைச் செலவுக்குத் தந்ததாகவும், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்திருந்தனர் எனவும் தெரிவித்தார்.

    ஆக, நிலையான அபிவிருத்தி மற்றும் போக்குவரதது தொடர்பிலான தீர்மானங்களை அமுல்படுத்தும் இந்த மாநாட்டுக் சென்ற எமது நகர சபைத் தவிசாளர் வந்ததும் வராததுமாக இப்படியொரு மோசடியில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

    இச்செய்தியை ஜப்னா முஸ்லிமுக்கு அனுப்பியுள்ள ஊடகவியலாளர் பழுலுள்ளாஹ் பர்ஹான் என்பவர் மாத்திரம்தான் இந்த நகர சபை அமர்வுக்கும் ஊடகவியலாளர் என்ற வகையில் சமூகமளித்திருந்தார் என்ற வகையில் இதனை அவராலும் மறுக்க முடியாது.

    எனவே ஊடகவியலாளர்களும் இவ்வாறான ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தி அவற்றை ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.