ரமளானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் வழிபாடுகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கும் சுற்றுநிருபம்
(யு.எம்.இஸ்ஹாக்)
பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ரமலான் பண்டிகை காலத்தில் விசேட விடுமுறை வழங்க வழமை போன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 12ஃ2013 இன் பிரகாரம் ரமலான் நோன்பு இம்மாதம் 09ஆந் தகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 08ஆந் திகதி முடிவடைய உள்ளதால் இவ்விழாக்காலத்தில் முஸ்லிம் அரச அலுவலர்களுக்கு தொழுகைக்கும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ள கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ,மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ,திணைக்களத் தலைவர்களுக்கும் ,அரச கூட்டுத்தாபனங்களுக்கும்,நியதிச் சட்ட சபைகளின் தலைவர்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரமலான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத் தாபனங்கள் சட்டவாக்க சபைகளில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் அலுவலர்கள் பணியாளர்களுக்கு விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அந்த சுற்று நிருபத்தில் அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ.அபயகோனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment