கொழும்பு புறக்கோட்டை ஐந்தாங் குறுக்தெரு கடைத்தொகுதி திறந்து வைப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மஹிந்த சிந்தனையின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கென நிருமாணிக்கப்பட்டு கடந்த 2011ஆம் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை ஐந்தாங் குறுக்தெரு கடைத்தொகுதி மீண்டும் 40 இலட்சம் ரூபாவில் புனர் நிருமானம் செய்யப்பட்டு நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்குவதன் பொருட்டு இன்று (21) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பிரதி மேயர் டைட்டஸ் பெரேரா, கொழும்பு மாநகர உறுப்பினரும் சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனத்தின் தலைவருமான மஹிந்த ஹகன்கம. சம்மேளனத்தின் செயலாளர் சானவ, கொழம்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகள் உட்பட பல பிரமகர்களும் கலந்து கொண்டனர்.
புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட மூன்று கடைத் தொகுதிகளில் இரண்டாவது கடைத் தொகுதியாகும் இதில் சமார் 534 பேருக்கு இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment