பதுளை சிறைச்சாலையில் இப்தார் நிகழ்வு (படங்கள்)
(மொஹமட் பாயிஸ்)
புனித ரமழானை முன்னிட்டு ஊவா மாகாண ஜனாசா நலன்புரி சங்கம் பதுளை தல்தென சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வையும், உபகரணம் சிறவற்றையும் கையளிக்கும் நிகழ்வு சனிகிழமை மாலையில் நடாத்தியது. இதன்போது பதுளை சிறைச்சாலையினுள் இடம்பெற்ற நிகழ்வில் பதுளை சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவர் ஏ.எச்.எம். ஜாபீர் மற்றும் ஜனாசா நலன்புரி சங்க அமைப்பாளர் ரிபாஸ் மொஹிடீன் அதன் தலைவர் மௌலவி அமானுல்லா உள்ளிட்ட பிரமுகர்களும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பதுளை சிறைச்சாலைக்குள் அமைந்திருக்கும் முஸ்லிம் பள்ளிவாசலில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ரியாலுஸ்சாலி ஹதீஸ் கிரந்தமு கைதிகளின் நலன் கருதி சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து தல்தென சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கான சதக்கா பொருட்களும் இப்தார் நிகழ்விற்கு தேவையான உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment