அம்பாறை றம்புக்கன் ஓயா நீர் தேக்க திட்டத்தினை ஜனாதிபதி திறந்து வைத்தார்
(எம்.ஜே.எம். தாஜுதீன் + ஏ.பி.எம்.அஸ்ஹர்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 3970 மில்லியன் ரூபா செலவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை றம்புக்கன் ஓயா நீர் தேக்க திட்டத்தின் நீரை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்
நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபிள்யு. பீ. ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்ரம, பி.எச். பியசேன, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கே.டபிள்யு. ஐவன் டி சில்வா, நீர்ப்பாசத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் பத்ரா கமலதாச, பணிப்பாளர் நாயகம் காமினி ராஜகருணா, கிழக்கு மாகாண அமைச்சர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.


Post a Comment