Header Ads



குருணாகல் முஸ்லிம் கிராமங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக பேச்சு


(Iqnal Ali)

குருணாகல் மாவட்டத்தில் ஆளும் அரச கட்சியில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து குருணாகல் மாவட்டத்தில் பின் தங்கி முன்னேற்றம் காணாதுள்ள முஸ்லிம் கிராமங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார்.

இம்முறை குருணாகல் மாவட்டத்தை மையமாக வைத்து நடக்கவிருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான தயட்ட கிருள எனும் தேசத்திற்கு மகுடம்   திட்டத்தில் முஸ்லிம் கிராமங்களின்  சம்பந்தப்பட்ட பிரச்சணைகளின் மீது அரசின் கவணம் திரும்பியுள்ளது.

4 comments:

  1. டும் டும் டும் தேர்தல் வந்தாச்சு டும் டும் டும்

    ReplyDelete
  2. இதுவெள்ளாம் தேர்தல் விளையாட்டு.

    ReplyDelete
  3. Kind request for the Muslims in Kurunagala district: Do we have to vote for UPFA? Why?
    1. Is it for closing the mosques from Dambulla to Mahiyangana?
    2. Is it for removing Halal symbol from all the products?
    3. Is it for closing beef stalls and burning them?
    4. Is it for banning head cover of our women?
    5. Is it for destroying the economy of our Muslim brothers?
    6. Is it for collecting details of Mathrasa & mosques here?
    7. Is it for stopping new mathrasa and mosques in the country?
    there are many more questions. Please educate the people there.

    ReplyDelete
  4. இப்படித்தான் எமது ஊரிலும் நன்றாக இருந்த பள்ளிவாசலொன்றை உடைத்து விட்டு மஸ்ஜிதுல் அக்ஸா வடிவில் கட்டுவதாக ஜனாதிபதி மஹ்ந்த ராஜபக்ஷ அவர்களே அவரது இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது பொதுக்கூட்டம் போட்டுப் பேசிவிட்டு அடிக்கல்லும் நாட்டி விட்டுப போனார். வருடம் எத்தனையாகிறது என்பதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இலங்கையில் அரசியல் நோக்கத்தோடு உடைக்கப்பட்ட முதலாவது பள்ளிவாசல் காத்தான்குடியில்தான் இருக்கிறது என்பது வரலாறாகும்.

    இப்படித்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போதும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் காத்தான்குடி கடற்கரையை 'குட்டி மெரீனா' கடற்கரையாக்குவதாக பெரிய பெரிய கலர் பெணரை எல்லாம் கடற்கரையில் வைத்து ஷோ காட்டி வாக்குப் பெற்றார்கள். வருடம் ஒன்றாகிறது.. இன்னும் அப்படியேதான் உள்ளது.

    தேர்தலில் போட்டிக்கு நின்ற பின்னர்தான் இவர்களைப் போன்ற அரசியல் வியாபாரிகள் கொங்றீட் கொந்தராத்து அரசியல் வியாபாரம் பற்றிப் பேசி மக்களுக்கு றீல் விடுவார்கள்.

    இவரும் "இலட்சக்கணக்கில் செலவழித்து கோடிக்கணக்கில் உழைக்கும்" நோக்குடைய ஒரு வியாபார அரசியல்வாதியாகத்தான் தனது செயற்பாடுகளை
    முன்னெடுக்கின்றார்.

    வட மத்திய மாகாண - குருணாகல் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உங்களைச் சூழ்ந்து வரும் பொது பல சேனா "சுனாமி"யைப் பயந்து கொள்ளுங்கள். அதனை நிர்மூலமாக்க உங்கள் வாக்குகளைப் பிரயோகிப்பீர்கள் என நம்புகிறேன்

    -புவி றஹ்மதழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.