Header Ads



குத்ஸ் தினம் என்ற பெயரில் முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி


(சுவைர் மீரான்)

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாம் வழங்கியுள்ள மூன்று புனிதத் தலங்களில் மக்காவில் அமைந்துள்ள கஹ்பா, மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகியவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது பலஸ்தீனில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் ஆரம்ப கிப்லாவாகிய மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். இது பைத்துல் முகத்தஸ் எனவும் அழைக்கப் படுகின்றது.

ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமையை "குத்ஸ் தினம்" என்ற பெயரில் முஸ்லிம்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சிகளும், அதன் பின்னணியில், முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்களிடமிருந்து மறைக்கும் சதிகளும் தொடர்ச்சியாக அரங்கேற்றப் பட்டு வருகின்றன.

மஸ்ஜிதுல் அக்ஸா என்றதும் பலருக்கும் மனதில் தோன்றுவது, ஜொலிக்கும் தங்க நிற மிஹ்ராப் கொண்ட எட்டு மூலை மஸ்ஜித் ஆகும். உண்மையில் அது மஸ்ஜிதுல் அக்ஸா அல்ல.

அது மஸ்ஜிதுல் சக்ரா எனப்படும் பள்ளிவாசல் ஆகும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறு மிகப் பழமையானது, நபி சுலைமான் (அலை) அவர்களால் ஜின்களின் துணையுடன் கட்டப்பட்ட தொன்மையான புகழ்பெற்ற வரலாறு அநேகமான முஸ்லிம்கள் நன்கறிந்த ஒன்றே.

மஸ்ஜிதுல் சக்ரா என்பது, மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சற்றுத் தொலைவில், ஐந்தாவது உமையா கலிபா அப்த் அல் மாலிக் இப்னு மர்வான் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும்.

அப்துல்லாஹ் இப்னு ஷபா அல் யஹுத் என்ற யூத முனாபிக் மூலம் உருவாக்கப்பட்டவர்களே ஷியாக்கள் என்னும் நிலையில், ஷியாக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இரகசிய தொப்புள்க் கொடி உறவு இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவே கருதப்படுகின்றது. 

1979 இல் பிரான்சில் இருந்த கொமைனி வழிகாட்டுதலில் ஈரானில் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் கொண்டுவரப் பட்டபொழுது, அது "இஸ்லாமியப் புரட்சி" என்று உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அது உண்மையில் இஸ்லாமியப் புரட்சி அல்ல, வெறும் ஷியாப் புரட்சிதான் என்பதனை முஸ்லிம்கள் மிகவும் தாமதமாகவே உணர்ந்தனர்.

1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி என்ற இந்திய எழுத்தாளர் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் மனைவியர், தோழர்களைக் குறித்து மிக மோசமாக எழுதி "சாத்தானிய வசனங்கள்" என்ற நாவலை வெளியிட்ட பொழுது, அப்போதைய ஈரானின் ஆட்சியாளர் கொமைனி, சல்மான் ருஷ்டிக்கு பகிரங்கமாக மரண தண்டனை விதிப்பதாக பிரகடனம் செய்ததன் மூலம், முஸ்லிம்களின் தலைவர் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள முயன்றார்.

எனினும், ஷியாக்களின் வேத நூல்களில், நபிகளாரின் மனைவியர் குறித்தும், தோழர்கள் குறித்தும், சல்மான் ருஷ்டி எழுதியதை விடவும் மிக மோசமாக எழுதபப்ட்டுள்ளது என்ற உண்மைகள் தாமதமாக முஸ்லிம்களுக்குத் தெரிய ஆரம்பித்தபொழுது, கொமைனியின் முகமூடி கிழிந்தது மட்டுமல்ல, ஷியாக்களின் உண்மை முகமும் வெளிப்பட ஆரம்பித்தது.

காலத்திற்குக் காலம் முஸ்லிம்களை ஏமாற்ற ஷியாக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே குத்ஸ் தினம் என்ற பெயரில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.

மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதுல் சக்ராவை அறிமுகம் செய்து, அதனை நம்ப வைப்பதன் மூலம், நாளை யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முற்றாக அழித்து நாசம் செய்தாலும், முஸ்லிம் உலகம் மஸ்ஜிதுல் சக்ராவைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டு, மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நிகழ்ந்த அநியாயத்தை உணர்ந்து கொள்லாமலே இருக்க வேண்டும் என்பதனைத் தவிர வேறென்னதான் ஷியாக்களின் திட்டமாக இருக்க முடியும்?

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் நல்லது செய்வது போன்று நயவஞ்சகமாக நடித்துக் கொண்டு, ஷியாக்கள், யூதர்களுக்குத் துணை போவது குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உளவாளிகளை கொண்டுள்ள ஈரான், "தவறுதலாக, தெரியாத்தனமாக (கடந்த 35 வருடங்களாக) பிழையான படத்தை பயன்படுத்தி இருக்க முடியும்தானே" என்று யாராவது ஈரானின் சதியை நியாயப்படுத்த முனைவார்களாக இருந்தால், அவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பதே நமக்கு நல்லது.

இஸ்லாத்தின் எதிரிகளின் சதிகளை முறியடித்து, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.



12 comments:

  1. முஸ்லிம்கள் என குறிப்பிடபடுவர்களுள் கலிமா ஷஹதாவை மொழிந்த ஷியாக்களும் சுன்னிகளும் அடங்குவார்கள் எனின் ...சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் எஹூதி-நாசராநிகளுடன் நேச உறவையும் தமது நாடுகளில் அவர்களுக்கு இராணுவ தளங்களையும் மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்துள்ள மன்னராட்சி அரபு நாட்டு தலைமைகளை முஸ்லிம்களின் பாதுகாவலர் என்பதா அல்லது எஹூதி நாசராநிகளின் ஒற்றர்கள் என்பதா.....??? தொப்புள் கொடி உறவுள்ள ஷியா ஈரானை, ஏன் யூத இஸ்ரேல் ஈரானின் அணு உலைகளை தாக்கவேண்டும் என்று விடாபிடியாக நிற்பதுடன் சர்வதேச துணையுடன் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை அமுலாகிறது...பதிலாக ஈரானும் தன்மீது இஸ்ரேல் தாக்கினால் அது(இஸ்ரேல்) உலக வரைபடத்தில் இருந்து அழிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது .. தொப்புள் கொடி உறவின் மகிமை அதுதானோ.....????

    ReplyDelete
  2. QUDS is the Arabic Name for JERUSALEM. QUDS day is marked to liberate entire JERUSALEM. It includes all what Muslims must possess. Your argument is hate mongering and baseless.

    ReplyDelete
  3. இது ஒரு வீணான வாதம். முஸ்லிம்களின் அபகரிக்கப்பட்ட பலஸ்தீனிய புனித தளங்களைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே குத்ஸ் தினத்தின் பிரதான நோக்கம். இதை மாசுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது எமது புனித தளங்களுக்கு துரோகமிழைபப்பதற்கு சமன். பைத்துல் முகத்தஸ் பள்ளிவாயலைத்தான் குத்ஸ் என அழைக்கின்றனர். குத்ஸ் தினம் என்றுதான் சொல்கின்றார்களே தவிர சஹ்ரா தினம் என்பதில்லை.

    ReplyDelete
  4. @ Brother Marzuk,

    யூத - ஷியா தொப்புழ்க் கொடி உறவின் மகிமை புரியாமல் இப்படி சின்னப்பிள்ளைத் தனமாக கேள்வி கேட்கின்றீர்களே?

    முஸ்லிம்களை அழிப்பதற்காக யூதர்களால் உருவாக்கப்பட்ட ஷியாக்கள், முஸ்லிம்களான உங்கள் கண்களுக்கு முன்னால் யூதர்களைக் கட்டித் தழுவி, தங்கள் பிறப்பின் ரகசியத்தை பகிரங்கப் படுத்தும் அளவிற்கு முட்டாள்கள் என்றா நினைக்கின்றீர்கள்?


    நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், ஒருவர் இன்னொருவரை காபிர் என்று சொல்லி, அது சொல்லப்பட்டவருக்கு பொருந்தாவிடின், சொன்னவரையே சேரும். என்று. ( ஹதீஸ் ; புகாரி)

    ஷியாக்கள் உத்தமர்கலான அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி), ஆயிஷா (ரலி) உட்பட சஹாபாக்களையும், உம்முஹாதுள் முஹ்மினீன்கலையும் காபிர் என்று சொல்லி சபிக்கின்றனர். ஆனால் இவர்கள் யாருமே காபிர்கள் இல்லை. ஆகவே, காபிர் என்பது சொன்னவர்களையே சேரும்.

    சஹாபாக்களை காபிர் என்று சொல்வதன் மூலம், ஷியாக்கள் தங்களைத் தாங்களே காபிர் ஆக்கிக் கொண்டார்கள்.


    ஈரான் இஸ்ரவேல் பகைமை எல்லாம் முஸ்லிம்களான நம்மை ஏமாற்ற நடக்கும் நாடகம் மட்டுமே. [பாருங்கள், நீங்களே இதனை உண்மை என்று நம்பி ஏமாந்துதானே இருக்கின்றீர்கள்?]

    ஈரானும் இஸ்ரவேலும் முஸ்லிம்களை ஏமாற்றி, ஈரான் உண்மையாக முஸ்லிம்களுக்காக உள்ள நாடு என்று நம்ப வைப்பதற்காக, அதோ மோதப் போகின்றோம், இதோ தாக்கி அழிக்கப் போகின்றோம் என்று வீர வசனங்கள் பேசிக் கொள்வார்கள், நாடகம் நடக்கும், ஆனால் நிஜத்தில் எதுவும் நடக்காது. இதுதான் 34 வருடகால வரலாறு.


    ஹிஸ்புல்லாஹ் இஸ்ரவேல் 2005 யுத்தம் கூட ஒரு நாடகமே. ஹிஸ்புல்லாக்களை உலக அரங்கில் முஸ்லிம்கள் மத்தியில் ஹீரோக்கள் ஆக்குவதற்காக நடைபெற்ற நாடகமே அது. இஸ்ரவேல் யுத்தத்தில் தோற்றது போலவும், ஹிஸ்புல்லாக்கள் வென்றது போலவும் பிரமை ஏற்படுத்தப் பட்டு அந்த நாடகம் நிறைவு செய்யப் பட்டது.


    ஹிஸ்புல்லாக்கள் உண்மையில் வெற்றி பெற்றார்கள் என்றால், ஏன் இஸ்ரவேலை தாக்கி அழிக்காமல் யுத்தத்தை நிறுத்தினார்கள்? ஹிஸ்புல்லாக்கள் மட்டும் போராடியே பெரிய வெற்றி என்றால், ஈரானையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரவேலை தாக்கி அழித்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை? எல்லாம் ஒரு நாடகம்.

    இஸ்ரவேலின் அதி உயர் தொழில்நுட்பத் தாக்குதல்களில் சலஹ் ரமலான்களும், அய்யாஷ்களும், அஹமத் யாசீன்க்களும்தான் கொல்லப் படுவார்களே தவிர, அஹமதி நஜாத்களும், நஸ்ருல்லாக்களும் ஒருபொழுதுமே கொல்லப் படுவதில்லை, நாடகம் மட்டும் உச்சபட்ச வீர வசனங்களுடன் அரங்கேறும்.

    புரிந்துகொண்டால் சரிதான்.

    ReplyDelete
  5. @ haj rasool,

    இதிலஒன்றும் வீணான வாதம் இல்லை. மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்களிடம் இருந்து மறைத்து, யூதர்களுக்கு உதவும் சதி. எதற்காக மஸ்ஜிதுல் சக்ராவை முன்னிலைப் படுத்தி, மஸ்ஜிதுல் அக்சாவை மறைக்க வேண்டும்?

    ஷியாக்கள் யார் என்கின்ற அடிபப்டை உண்மைகளை புரிந்துகொண்டால், அவர்களின் செயட்பாட்டிட்கான நோக்கங்களும் தெளிவாக புரியும். நுனிப்புல் மேய்ந்தால், அஹமதி நஜாத் ஹீரோவாகத்தான் தெரிவான்.

    ReplyDelete
  6. SOUDI WAHABIYYA MANNARAI "KHADIMUL HARAMAINI SHAREEFAINI" EANTU ALAIKKIRARARKAL.ATAIWIDA "KHADIMUL ADUVVAINI ALMUJRIMAINI"(ISREAL&USA) EANPATUTAN REMBA PORUTTAM

    ReplyDelete
  7. நீங்கள் புகாரி இல்ருந்து மேற்கோள் காட்டியிருந்தீர்கள் முஹ்மீன்களே நீங்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிகொள்ளாதீர்கள் அப்படி செய்தால் நீங்கள் அவர்களை சார்ந்தவர்தான் (5:51) சவுதியிலும் குவைத்திலும்,கட்டாரிலும் முடியாட்சி செய்வோர் பாதுகாப்புக்கு யாரை வைத்துள்ளனர் என்பதற்கு நான் குறிப்பிட்டுள்ள திருமறை வசனம் நல்ல சான்று இவர்களை தான் முஸ்லிம் உலகு தமது காவலர்கள் என கருதிக்கொண்டிருப்பதும் வாஸ்தவமே.ஈரானின் அணு உலைகளை அழிப்பதற்கு தமது வான் பரப்பை பயன்படுத்தவும் எஹூதி நஸ்ராநிகளுக்கு வழங்க இவை ஆயத்தமாகவே உள்ளன. எஹூதி நஸ்ரானிகள் இஸ்லாமிய அணு குண்டு எனும் போது நாமோ ஷியா சுன்னி கருத்து முரண்பாட்டை வைத்து ஈரான் வழிகேடர்கள் அழியவேண்டுமென ஆர்பரிக்கிறோம் அண்மைய எகிப்து நிலவரம் எதை காட்டுகிறது....ஜனநாயக தெரிவு ஜனாதிபதி பதவி கவிழ்பிக்கு துணை செய்து நிதி வழங்கிய நாடுகளில் சவூதி, இஸ்ரேல் அமெரிக்கா UAE பங்களிப்பு இரகசியமல்லவே

    ReplyDelete
  8. Careful there are some 'Summun Bukmun Umyun'(Deaf Dumb Blind)here too!

    ReplyDelete
  9. Israeliya zionisa thajjalkalaal uruvaakkappatta panamuthalaikalthaan intha wahabi salafikal .Israel,America,Saudi koottu panaththukkaaka ethayyum seyyum vettai mirukankalthaan intha salafikal .

    zionistukkal avarkalathu thondar padayyaana wahaabikalai vaiththu muslimkalin manathilirunhu QUDS[BAITHUL MOQADDAS]pattriya ninaivei illaatholikka mualkindranar .Athan oru ankamthaan intha visam kakkum aakkam .
    Ithatkaana oru maruppaiyyum unmayyaana QUDS THINATHTHIN mukkiyaththuvaththayyum unarthum vithamaana aakkam SONAKAR VALAITHTHALATHTHIL VELIYAANATHU.

    ReplyDelete
  10. please bring the history of Ali Raliyallahu. It's hidden and we are fighting as Shiayas and Sunnies. Allah is most gracious and he knows who is correct. Hope we were not misled by our Ancestors.

    ReplyDelete
  11. This article is suitable to throw in garbage bits.There is no trustful proofs .Ayatollah IMAM KHOMEINI introduced 'international quds day'in 1979 after the victory of islamic revolution.this day is helping us to keep alquds albaitulmoqaddas in our memory.
    And alquds ceremonies were held in almost all the countries in the world.All muslims[shia,sunni] participated in Alquds ceremonies without any discriminations and they showed their obvious support to palestene mujahideens.
    But wahabis,the friends of Israel,America,Saudi monarch are trying drag our mind from Palestene and those Salafis are supporting to the Israeli cruel regime.
    A best article written by SIR LATHEEF FAROOK shows the importance and validity of INTERNATIONAL QUDS DAY founded by IMAM ROOHULLA KHOMEINI{RAHMATHULLAHI ALAIH]
    So Muslims the friends of Palestene willbe much obliged to 'Jaffna muslim'website that if you could remove this page fulfilled with lies and baseless informations.please take it in concern and publish an article written by one of the FRIEND OF PALESTENE.

    ReplyDelete
  12. Saudi pichchaikku maaradikkum wahaabi munaafikkukale unkal poykalum ,ulambalkalum piramaatham.Suvair meeran avarkale ithanai eluthiyathanaal Saudiyil irunthu eththanai aayiram ,latchcham kidaythathu.panaththukkaaka ethayyum seyyum intha meeraanin ulambalkal .shabaash meera,shabaash meera

    ReplyDelete

Powered by Blogger.