அக்கரைப்பற்றில் யானைகளினால் பதற்றம் - மக்கள் நோன்பு காலத்தில் அவதி
(Tn) அக்கரைப்பற்று பிரதேசத்தில் நள்ளிரவு வேளையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்த தில் மக்கள் பெரும் பதற்றமடைந்தனர். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவிலேயே இச்சம்பவம் பற்றி மக்களுக்குத் தெரிய வந்துள்ளது.
யானைகளின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தல் செய்யப்பட்டதுடன், யானைகளை வெளியேற்றும் வகையில் பட்டாசு வெடிகளை கொளுத்தினர். இதனால் மக்கள் மேலும் அச்சமடைந்து அல்லோலகல்லோலப்பட்டனர்.
முஸ்லிம் மக்களின் புனித நோன்பு காலமாக இருப்பதனால் இச்சம்வம் அவர்களது மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதில் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. பொலிஸார் மற்றும் வன இலாகா அதிகாரிகளுக்கு சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டு ஊருக்குள் புகுந்த யானைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அக்கரைப்பற்று பட்டிமேடு வயல் பிரதேசத்திலிருந்து ஆலையடிவேம்பு பிரதான வீதியினூடாகவே இம்மூன்று யானைகளும் ஊருக்குள் புகுந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். விரட்டப்பட்ட யானைகள் அதிகாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்று பிரதான வீதியினை ஊடறுத்து அட்டாளைச்சேனை பாவங்காய் வீதியை கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாரங்கே.. அழைத்து வாருங்கள் நம் குதிரைப் படைத் தளபதியை!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இவ்வளவு கால வரலாற்றில் வராத யானை இப்போது எப்படி வந்தது? அல்லது கூட்டி வரப்பட்டதா?
ReplyDeleteThe day before yesterday I have seen a lorry with elephants which were brought from Deegawapya, but I could not watch where those were unloaded or curried out but those are trvelled through A 25 main street (From Deegawapiya through Varipathanchenai way.
ReplyDeleteyaanai kadchi aadchikku varappohira mun arivippu inda yaanaikalukkum vilankividdatho
ReplyDelete