மக்களை முட்டாளாக்கும் கோககோலா
பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான, கோககோலாவின் தயாரிப்புகள் தொடர்பான, "டிவி' விளம்பரங்களுக்கு, பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோககோலா, பலவித குளிர்பானங்களையும் தயாரித்து, உலகின் பல நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இதன் குளிர்பானம் தொடர்பான விளம்பரம், பிரிட்டனில் ஒளிபரப்பாகியது.
நாய் ஒன்று ஆட்டம் போடும் வகையில் ஒளிபரப்பாகிய அந்த விளம்பரத்தில், "கோககோலாவை ஒரு முறை அருந்துவதின் மூலம், 139 கலோரிகளை குறைக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரிட்டனின் சுகாதார நிறுவனங்கள், இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், கோககோலாவில் உள்ள எந்த வேதிப் பொருள் கலோரியை குறைக்க உதவுகிறது எனவும், கேள்வி எழுப்பின. எனினும், கோககோலா நிறுவனத்திடம் இருந்து, இதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், இவ்வகை விளம்பரங்கள் மக்களை முட்டாள் ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதை நம்பி மக்கள் குளிர்பானத்தை பருகுவதின் மூலம், உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்றும், பிரிட்டன் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, கோககோலாவின், "டிவி' விளம்பரத்திற்கு, பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.

Post a Comment