Header Ads



வைத்திய கலாநிதி அல்ஹாஜ் டாக்டர் எம்.எம். சஹீட்டுக்கு பாராட்டு விழா


(சுலைமான் றாபி)
 
நிந்தவூரை அடிப்படையாகக்கொண்டு வெளிநாட்டு தொழில் சார் பிரமுககர்களை உள்ளடக்கி கல்வி, பள்ளிவாசல், மதரசா மற்றும் வறியோர் நலம்பேணும்  செயற்பாடுகள் போன்றவற்றின் அபிவிருதிற்காக பல்வேறு துறைகளில் பங்காற்றிவரும் சர்வதேச நாடுகளில் வதியும் நிந்தவூர் சகோதரர்களின் அமைப்பான (Nintavur Expatriates Society International) நெசி அமைப்பின் ஸ்தாபகதலைவர் வைத்திய கலாநிதி அல்ஹாஜ் டாக்டர் எம்.எம். சஹீட் அவர்களினையும், அவ்வமைப்பினரையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று 06-07-2013 அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் கலாநிதி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.      

அல் ஹுதா சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவி ஓய்வு பெற்ற அதிபர் ஹாஜியாணி மைமூனா செயினுலாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாபீடத்தில் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக  மாகாண பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எச். யாகூப் ஹசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபையின்  எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 



1 comment:

  1. masha allah but he born pottuvil.other villages than pottuvil must gratitude pottuvil people

    ReplyDelete

Powered by Blogger.