Header Ads



'இஸ்ரேலியர்களை எங்களின் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கமுடியாது'

இஸ்ரேல் குடிமக்களுக்கு பயண அனுமதியை மறுத்த நடவடிக்கையை சவூதி ஏர்லைன்ஸ் நியாயப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும்,சவூதிக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை. எனவே இஸ்ரேலின் பயணிகளை தங்களின் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கமுடியாது என்று சவூதி ஏர்லைன்ஸின் டைரக்டர் ஜெனரல் காலித் அல் மல்ஹம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் ஜான் எஃப்.கென்னடி விமான நிலையத்தில் இருந்து சவூதி ஏர்லைன்ஸில் பயணிக்க முற்பட்ட இஸ்ரேலியர்களை அதிகாரிகள் தடுத்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விளக்கமளித்து காலித் அல் மல்ஹம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சவூதி ஏர்லைன்ஸின் நடவடிக்கை பாரபட்சமானது என்றும் இது தொடர்ந்தால் அமெரிக்காவில் சவூதி ஏர்லைன்ஸிற்கு அனுமதி மறுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. அரசியல் உறவு இல்லாத ஏதேனும் ஒரு நாட்டின் குடிமக்களிடம் நாங்கள் இதே அணுகுமுறையத்தான் கடைப்பிடிப்போம். காரணம் விமானம் தாமதித்தால், அவர்கள் எங்கள் நாட்டில் இறங்க அனுமதி அளிக்கவேண்டிய சூழல் உருவாகும். தூதரக உறவு இல்லாத ஒரு நாட்டின் குடிமக்களுக்கு இத்தகைய அனுமதி அளிப்பது கூடுதல் சிக்கல்களை உருவாக்க காரணமாகும் என்று காலித் அல் மல்ஹம்தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. கோமா நிலையிலிருந்து சவூதி கண்ணை மெல்ல மெல்ல திறக்கிறது

    ReplyDelete
  2. இது எல்லாம் ஒர் கந்துடைப்பு நாடகம் மக்களை திசை திருப்பும் முயச்சி, இஸ்ரேல் அமேரிக்காவின் கைம்பாவைதான் இப்போதய அரபிய ஆற்சியாலர்கள். இன்ஸா அல்லாஹ் காலம் இவர்களின் முடிவை மிக விரைவில் எழுதும்.

    ReplyDelete
  3. Saudi elavarasikku edutha nadavadikkaiku pathiladi? ellam kaaranathoduthaan...ivvalavu kaalamum enna seitharhal.engalukku kathila poova suthuhirarhal.

    ReplyDelete
  4. ALHAMTHULILLAH ALLAH WILL GIVE YOU VERY REWARD FOR YOUR STRICT ORDER

    ReplyDelete

Powered by Blogger.