Header Ads



மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்த பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் நீக்கம்

மியான்மரில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு அரசு சனிக்கிழமை விலக்கிக் கொண்டது.
கலவரம் ஏற்பட்ட மெய்க்திலா நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்பியதையடுத்து அவசரநிலை பிரகடனம் விலக்கிக் கொள்ளப்படுள்ளது.
மெய்க்திலா நகரில் கடந்த மார்ச் மாதம் புத்த மதத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வன்முறைச் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர். மியான்மரின் மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், முஸ்லிம் நாடுகள் மியான்மர் மீது ஆத்திரமடைந்தன. மியான்மரின் மேற்கில் உள்ள ரோகைன் மாகாணத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நிறம் மாறிய தேசத்தில்
    நீதி மறுக்கப்பட்ட
    யாருக்கும் புலப்படாத
    மௌன ஜீவன்களின்
    ஒவ்வொரு விடியலும்
    வலி சுமக்கும் முடிவுகளில்..

    கருப்பைச் சிசுக்களின்
    மூச்சிக் குழலை
    இறுக்கிப் பிடிக்கும்
    அவர்களின்
    குறுகிய நீண்ட கால
    சட்ட திட்டங்களுக்கும்
    நாளை நிகழ்வனவற்றிக்கும்
    நியாயம் சொல்ல காத்திருக்கும்
    நம்மவர்கள்
    வெட்ட வெளி வெளிச்சத்தில்
    ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  2. MUSLIMNAADUKAL AATHTHIRAPATTU ENNA KILITHTHATHU NAANUM THAAN AATHTHIRAPATTEN YENNE NADANTHU VITATHU

    ReplyDelete

Powered by Blogger.