தம்மிக தேரருடனான கேள்வி பதில்
(தமிழில் ஜெஸீம்)
கேள்வி: பௌத்தர்கள் சைவ உணவை மாத்திரம் உட்கொள்பவர்களாக இருக்க முடியுமா? முடியாதா?
பதில்: அதற்கு அவசியமில்லை, புத்தர் ஒரு சைவ உணவு உட்கொள்பவராக இருக்கவில்லை. அவர் தனது ஒழுக்க விழுமியங்களில் கூட சைவ உணவு உட்கொள்பர் தொடர்பில் எதுவும் போதிக்கவுமில்லை. இன்று இது தலைக்கீழாக உள்ளது. சைவ உணவு உட்கொள்ளாத எத்தனையோ நல்ல பௌத்தர்களும்; இருக்கிறார்கள்.
கேள்வி: ஆனால் நீங்கள் இறைச்சி சாப்பிட்டால், ஓர் இறை படைப்பின் இறப்புக்கு நீங்கள் மறைமுக பொறுப்பாளியாக இருக்கிறீர்கள். இது புத்தரின் முதற் போதனையை முறியடிப்பதாயில்லையா?
பதில்: நீங்கள் இறைச்சி சாப்பிடும் போது, ஒரு படைப்பை கொன்றதற்கு மறைமுகவாகவோ அல்லது பகுதியாகவோ பொறுப்புதாரியாக இருக்கிறீர்கள் என்பது உண்மைத்தான். ஆனால் அதே உண்மைத்தான,; நீங்கள் மரக்கறிகளை உட்கொள்ளும் போதும். விவசாயி தனது பயிர்ப்பச்சைகளுக்கு கிருமி நாசினி மற்றும் நச்சுப்பதார்த்ங்களை தெளிக்கிறான். அதன் காரணமாகவே மரக்கறிகள் எவ்வித துளைகளுமின்றி உமது இராப் போசன பீங்கானை வந்தடைகிறது. மறுபுறம், உமது இடுப்புப் பட்டி அல்லது கைப்பை என்பவற்றிற்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நீங்கள் பயன்படுத்தும் சவர்க்காரத்திற்கான எண்னெய், இதேப்போன்ற ஏனைய ஆயிரக்கணக்கான உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு வழங்கும் நோக்கில் மிருகங்கள் கொல்லப்படுகின்றன. இத்தகைய பொருட்களின்றி உயிர் வாழ்வது என்பது சாத்தியமற்றது. இன்னொரு வழியில் நீங்கள் வேறு சில மிருகங்களின் இறப்பிற்கு மறைமுகமாக பொறுப்பு கூற வேண்டியுள்ளீர்கள், இது முதலாவது கூறப்பட்ட உண்மைக்கான மற்றுமொரு உதாரணமாகும். நீங்கள் புத்தரின் முதற் போதனையை பின்பற்றும் போதே மிருக கொலைக்கு நேரடிப் பொறுப்பாளியாக இருப்பவர்களை தடுக்க முயற்சிக்கிறீர்கள்.
கேள்வி: மகாயன பௌத்தர்கள் இறைச்சி உட்கொள்ளவில்லை தானே?
பதில்: இது தவரான கருத்து, சீனாவிலே இருக்கக்கூடிய மகாயன பௌத்த மதம் சைவ உணவை உட்கொள்ள பெரிதும் அழுத்தம் கொடுத்தது. ஆனால் ஜப்பானில் மகாயன வழக்காறுகளை பின்பற்றும் பிக்குகளும், திபெத்தியர்களும் வழமையாக இறைச்சியை சாப்பிடுகின்றனர்.
கேள்வி: ஆனால் என்னைப் பொருத்தமட்டில் ஓர் பௌத்தன் சைவம் உட்கொள்பவனாக மாத்திரம் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
பதில்: சைவ உணவு உட்கொள்வதில் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்ட ஒரு நபர் இருந்தார் ஆனால் அவர் சுயநலமிக்கவராகவும், நேர்மையை தொலைத்தவராகவும், இழிவானவராகவும்; இருந்தார். இன்னொரு நபர், அவர் சைவ உணவு உட்கொள்ளாதவர் ஆனால் அவர் பிறரைப்பற்றிய சிந்தனை கொண்டவராகவும், நேர்மையானவராகவும், தாராள உள்ளம் கொண்டவராகவும், இரக்கசுபாவமுடையவராகவும் இருந்தார். இவர்கள் இருவரில் யார் சிறந்த பௌத்தராக இருக்க முடியும்?
கேள்வி: நேர்மையாகவும், இரக்கமாகவும் நடந்து கொண்ட நபர்.
பதில்: ஏன்?
கேள்வி: ஏனெனில், குறித்த அந்த நபர் நல்லுள்ளம் கொண்டவர் என்பது தெரிகிறது.
பதில்: நிச்சயமாக, இறைச்சி உண்ணக்கூடிய ஒருவருக்கு தூய்மையான உள்ளம் இருக்க முடியும், அதேப்போன்று இறைச்சி சாப்பிடாத மற்றொருவருக்கு தூய்மையற்ற அழுக்கான உள்ளம் இருக்க முடியும். புத்தரின் போதனையில் மிக முக்கியமான அம்சம், உன் உள்ளத்தின் தராதரமே தவிர நீ உட்கொள்ளும் உணவு அல்ல. அதிகமான பௌத்தர்கள் இறைச்சி உட்கொள்வதை எதிர்ப்பதிலே கூடிய பிரயத்தனம் எடுக்குக்கின்ற அதேவேளை அவர்களது சுயநலம், நேர்மை கெட்ட குணம், பொறாமை என்பவற்றின் பால் கவனம் செலுத்துவதேயில்லை. அவர்கள் செய்வதற்கு இலகுவாக இருக்கின்ற உணவு விடயத்தில் மாற்றத்தினை கொண்டு வருகிறார்கள். அதேநேரம் செய்வதற்கு கடினமான விடயமான உளமாற்றத்தை புறக்கனித்து விடுகிறார்கள். நீங்கள் ஓர் சைவ உணவு உட்கொள்பவர்களாக இருக்கலாம் இல்லது இல்லாது போகலாம். பௌத்த மதத்தில் மிக மிக மிக முக்கியமான விடயம், உளத்தூய்மை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
.jpg)
நாங்கள் அறியாத பல தகவல்களை முன்வைத்தீர்கள். மிக மிக நன்றி. பொது பல சேனா அங்கத்தவர்கள் ஏன் இதனை உணருவதில்லை. எவரும், சாப்பிடலைலாம், சாப்பிடாமலிருக்கலாம். ஆனால் நடு நிலையாக நின்று சிந்தித்து உண்மையை உணரலாமே. இஸ்லாத்தில் பன்றி கடும் அசுத்தமான பிராணி, நாயும் அசுத்தமான பிராணி. அப்படியிருந்தும் அவற்றை அநியாயமாக அடிப்பது கூட தண்டனைக்குரிய குற்றமாகும். முறையாக அறுத்து சாப்பிடுவதற்கு சில உயிரினங்களை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இதைப் பார்த்து மிருக வதையென்று கத்துவதும், அறுக்கத் தடைச் சட்டத்தை வேண்டுவதும் பகுத்தறிவற்ற செயல்களே.
ReplyDeleteY bbs can't undersdant this.bbs only says lie.they should read this interview.
ReplyDeleteCan you please translate this into English and Singhala language.
ReplyDeleteநாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இனத்துவேசத்தை அதிகரித்தாவது தமது சுய நல அரசியலை பாது காப்போம் என்று கூட இவர்களின் நோக்கம் இருக்கலாம். வழமையாக இலங்கை அரசியலை மாற்றம் கொண்டு வரக் கூடிய எதிர்ப்புகள் வருகின்ற போதெல்லாம் இவ்வகையான இனப்பிரச்சனைகளை முன் வைத்து ஸ்ரசியல் பிழைப்பு தடத்துவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இப்போது விலையெற்றம் முக்கியமாக மின்சாக கட்டணத்தின் போது இவ்வகையான யுக்திகளை கையாண்டு இன்று விலையெற்றம் முக்கிய காரணமல்ல நாட்டின் இருப்பே முக்கியம் என்று சொல்லக் கூடிய நிலைக்கு நாம் வந்து விட்டோம் அல்லவா. இதன் மூலம் ஆளும் கட்சியினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடுவார்கள். 1. பௌத்த மதத்தை பாதுகாப்பவர்கள் போலவும் 2. இறுதியில் அவர்களாகவே இந்த பிரச்னையை தீர்த்து வைத்தவர்கள் போலவும் சிருபான்மையினரிடத்தில் தம்பட்டம் அடித்தும் கொள்வார்கள்.
ReplyDeleteநாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இனத்துவேசத்தை அதிகரித்தாவது தமது சுய நல அரசியலை பாது காப்போம் என்று கூட இவர்களின் நோக்கம் இருக்கலாம். வழமையாக இலங்கை அரசியலை மாற்றம் கொண்டு வரக் கூடிய எதிர்ப்புகள் வருகின்ற போதெல்லாம் இவ்வகையான இனப்பிரச்சனைகளை முன் வைத்து ஸ்ரசியல் பிழைப்பு தடத்துவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இப்போது விலையெற்றம் முக்கியமாக மின்சாக கட்டணத்தின் போது இவ்வகையான யுக்திகளை கையாண்டு இன்று விலையெற்றம் முக்கிய காரணமல்ல நாட்டின் இருப்பே முக்கியம் என்று சொல்லக் கூடிய நிலைக்கு நாம் வந்து விட்டோம் அல்லவா. இதன் மூலம் ஆளும் கட்சியினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடுவார்கள். 1. பௌத்த மதத்தை பாதுகாப்பவர்கள் போலவும் 2. இறுதியில் அவர்களாகவே இந்த பிரச்னையை தீர்த்து வைத்தவர்கள் போலவும் சிருபான்மையினரிடத்தில் தம்பட்டம் அடித்தும் கொள்வார்கள்.
ReplyDelete