Header Ads



கத்தாரில் தமிழ் பேசும் சகோதரர்களுக்கான விஷேட இஸ்லாமிய விழிப்புணர்வு மாநாடு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 05.07.2013 வெள்ளிக்கிழமை கத்தார், மதீனா கலீபாவில் அமைந்துள்ள சவவூதி மர்கஸ் மண்டபத்தில், கத்தார் நேரப்படி மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை இஸ்லாமிய விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ‘சோதனையில் சிக்கித்தவிக்கும் முஸ்லிம் சமூகம்’ எனும் தலைப்பில் பிரதான உரை நிகழ்த்தவுள்ளார் இலங்கையில் இருந்து வருகை தரவிருக்கும் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதல் ஆசிரியர் அஷ்ஷெய்க்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (சலபி). மற்றும் ‘ரமழானை வரவேற்பது எப்படி’ எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார் கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சு அவ்காப் இமாம் அஷ்ஷெய்க்: ஏ.எச்.எம். பர்ஹான் (மதனி) அவர்கள்.

எனவே, இந்நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் சகோதர சகோதரிகளையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது கத்தார் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய சென்டர்.


No comments

Powered by Blogger.