Header Ads



கல்குடா தொகுதி பிரதேச அபிவிருத்தி குறித்து மீளாய்வு கூட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  அரசாங்கத்தினால் பிரதேசம் தோறும் தற்போது மேற்கௌளப்பட்டு வருகின்ற அணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பணிப்புரைகளை விடுத்துள்ளது.

இதற்கிணங்க மாட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எச்.எம். சாள்;ஸ் சகல பிரதேச செயலாளர்களுக்கும்  அறிவுத்தல்களை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் கல்குடா தொகுதியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான மீள் ஆய்வு  கூட்டம் பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார் தலைமையில் புதன் கிழமை 03.07.2013 பிரதேச செயலக மண்டபத்தில்  நடை பெற்றது. 

இக் கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்ஹமீட ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பொதுச்சுகாதார பணிமனையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.முஸ்பா,பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஐ.றியாஸ் உள்ளீட்ட சுகாதார,விவசாய மற்றும் அரச தினைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் துஷ்பிரயோகமும் சிறுவர் உரிமைகளும்,செயலக பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும்,தனியார் கல்வி நிறுவன நேர ஒழுங்குகள் ,சமூக சேவை நிறுவனங்களின் செயற்பாடுகள் குறிந்தும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் சிரமதானம் குறிந்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டு செயலக பிரிவின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் ஓட்டமாவடி பொது சுகாதார வைத்திய பணிமனை மற்றும் பிரதேச சபைகளின் உதவியுடன் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயலகத்தினால் முன்னொடுப்பதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டன.
                                                                                                                                                                                                                               

No comments

Powered by Blogger.