அமெரிக்க கப்பற்படையில் ரோபோ மூலம் இயங்கும் ஆளில்லா விமானம்
அமெரிக்க ராணுவத்தில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்ஸ்) உள்ளன. இவை உளவு பணியில் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏவுகணைகள் வீசி தீவிரவாதிகளையும் அவர்களின் இலக்குகளையும் அழித்து வருகின்றன.
அதே போன்று, அமெரிக்காவின் கடற்படையிலும் ஆளில்லாமல் இயங்கும் ‘ரோபோ’ விமானம் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எக்ஸ்–47 பி என பெயரிட்டுள்ளனர். இவற்றில் வவ்வால் இறகு போன்ற இறக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லா விமானத்தை போர்க்கப்பலில் தரை இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இந்த விமானம் யு.எஸ்.எஸ். ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் விமானம் தாங்கி போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல்கல் ஆக கருதப்படுகிறது. இதுகுறித்து கடற்படை செயலாளர் ரேமயிஸ் கூறும் போது ‘எதிர்காலத்தை இன்றே பார்க்கிறோம் என பெருமிதத்துடன் கூறினார்’.

Post a Comment