இந்தியா கூறுவதை கேட்கவேண்டியதில்லை - கோட்டா
(Tm) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தேசிய பிரச்சினையாகும். இயல்பான இந்த பிரச்சினையை இலங்கையிலேயே தீர்க்கவேண்டும் என்பதுடன், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா கூறுவதை கேட்கவேண்டியதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விடயத்தில் இந்தியாவை கேட்கவேண்டியதில்லை, இந்தியாவுடன் எமக்கு நல்லுறவு இருக்கின்றது. இதுவொரு விவகாரமல்ல, அதில் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதனை இலங்கை தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர இந்தியா அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வே காணப்படவேண்டும். 13 ஆவது திருத்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுக்கு எவ்விதமான பங்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment