சாய்ந்தமருதில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
(எஸ்.அஷ்ரப்கான் + யு,கே.காலித்தீன் + சனாஸ்)
அக்கரைப்பற்று ஒலிவ் பவுன்டேசன் ஏற்பாட்டில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 02-07-2013 காலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் சாய்ந்தமருது அமைப்பாளர் றிஸ்கான் முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கொம்டெக் கல்வி நிறுவன பணிப்பாளருமான ஏ.எம். ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணர்களுக்கு புலமைப் பரிசிலுக்கான அனுமதிகளை வழங்கிவைத்ததுடன், ஒலிவ் பவுன்டேசன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் சேவை நலன் பாராட்டி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவித்தார்.


Post a Comment