இந்தோனேசியாவில் குத்துச்சண்டை போட்டி - நெரிசலில் 17 பேர் மரணம்
இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நெரிசலில் சிக்கி 17 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நடந்த குத்துச்சண்டை போட்டியில், தோற்ற போட்டியாளரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பெண்கள் உட்பட 17 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர்.
இந்த போட்டியை சுமார் 1500 பேர் பார்த்துக் கொண்டிருந்த போது வன்முறை வெடித்ததால் ஏற்பட்ட நெரிசலே அசம்பாவிதத்துக்குக் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment