Header Ads



முஸ்லிம் மதகுருக்களுக்கு மத அவமதிப்பு SMS அனுப்பியவருக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பக்பட்டான் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத்சிங். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.

இவர் தனது செல்போன் மூலம் கோஜ்ராவில் உள்ள தோபா தெக்சிங் பகுதி முஸ்லிம் மத குருக்களுக்கு செய்தி அனுப்பினார். அதில் மத அவமதிப்பு வாசகங்கள் இருந்ததாக புகார் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவர் மீது தோபா தெக்சிங் மாவட்ட கோர்ட்டில் மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மியான் ஷாசத் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.