Header Ads



'முஸ்லிம்கள் தங்கள் கலாசாரத்தையும், ஒற்றுமையையும் பேணி வாழ்வது அவர்களது பொறுப்பு'

(Tn) இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல பொதுபல சேனா என்று அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுபல சேனாவின் தலைவர் சிரம விமலஜோதி தேரரையும், அதன் செயலாளர் கலகொட ஞானசார தேரரையும் ஜனாதிபதியின் ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மெளலானா நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சமயமே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெள லானா கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எமது பெயரைப் பாவித்தும் சிலர் மேற்கொள்கின்றனர். அதனால் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாம் பொறுப்பாளர்கள் அல்லர். இந்நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர்கள் கூறினர். இரு தரப்பினருக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக இரு தரப்பாளருக்குமிடையில் நிலவும் ஐயங்களையும், சந்தேகங்களையும் களைவது மிக அவசியம். இதற்கென கலந்துரையாடி வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் தங்கள் கலாசாரத்தையும், ஒற்றுமையையும் பேணி வாழ்வது அவர்களது பொறுப்பு என்றும் பொதுபல சேனா தலைவர்கள் குறிப்பிட்டனர். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறினார்.

4 comments:

  1. பொது பல சேனாவில் எந்த பலமும் இல்லை . சமூகமே பயப்புட வேண்டாம் . நம் அல்லாஹ் கைவிட மாட்டான் அவனுக்கு பொருத்தமாக நாம் நடந்தால்

    ReplyDelete
  2. What is happening and what they are talking? the President concellor Mr.Abdul Cader Masoor Moulana is also joking with those BBS.

    ReplyDelete
  3. Don't belive this kind of person
    ther are kaafir they would create conflict back us

    ReplyDelete
  4. நீங்கள் சென்று சந்தித்து வீடு செல்வதட்கு முன்னமே வலது காதால் வாங்கி இடது காதால் விட்டுவிட்டார்கள் மௌலானா

    ReplyDelete

Powered by Blogger.