Header Ads



நோன்புப் பெருநாளுக்காக பாகிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி, பாகிஸ்தானில் அதிபர் தேர்தல், இம்மாதம் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவி காலம், அடுத்த மாதம், 8ம் தேதி முடிகிறது. இதையடுத்து, அடுத்த மாதம், 6ம் தேதி, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ரம்ஜான் நெருக்கத்தில், அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழுகைகளில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளதாக, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர், ஜபருல் ஹக், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், அதிபர் தேர்தலை, இம்மாதம், 30ம் தேதி நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. 

"அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடப் போவதில்லை' என, அதிபர் சர்தாரி அறிவித்துள்ளார். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், ஜவுளி வர்த்தகர், மம்நூன் ஹுசைன், அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளரான ஹுசைன், 99ம் ஆண்டு, சிந்து மாகாண கவர்னராக இருந்தார். இவர் உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நகரில், 1940ல் பிறந்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், ரசா ரபானியும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின், தேரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில், முன்னாள் நீதிபதி வாஜுதீன் அகமதுவும், அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.