இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றி அறிவிக்க வேண்டுகோள்
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையத்திற்கு அல்லது தமது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு குடிவரவு - குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறானவர்களை கைது செய்யும் சுற்றிவளைப்புகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய இரகசிய தகவல் பிரிவு ஆகியன ஒன்றிணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் இதுவரை சில வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெரேரா தெரிவித்தார். Nf

Post a Comment