Header Ads



உகண்டாவில் கோத்தா (படங்கள்)

உகண்டாவுடன் இராணுவ நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அந்த நாட்டுப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும் சிறிலங்கா முன்வந்துள்ளது. 

உகண்டாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன், உகண்டா அதிபர் யொவேரி முசெவேனி நேற்று என்டபே அரச மாளிகையில் நடத்திய பேச்சுக்களிலேயே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்பு, இராணுவம் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. 

மேலும், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, அனர்த்த முகாமைத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, உகண்டா மக்கள் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு பயிற்சிகளை அளிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. 

இந்தப் பேச்சுக்களில் உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர், ஜிஜி ஒடோங், லெப்.ஜெனரல் சார்ள்ஸ் அன்ஜினா, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக, ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஆகியோரும் பங்கேற்றனர். 

2 comments:

  1. Please do not ask money, they are like us or lowerst than us. No any special news about that country. Leave it please

    ReplyDelete

Powered by Blogger.