மதுபோதையில் விமானத்தின் கதவைத் திறக்கமுயன்ற அமைச்சரின் மகனுக்கு அபராதம்
மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அவரின் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் 50 சதவீத பணத்தொகையே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அத்துடன் ரமித் ரம்புக்வெல்ல கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல, மேற்கிந்தியத் தீவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த போது 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. tm

குடி வெறியில் கதவைத்திறக்க முட்பட்டது ஊர்ஜிதமானால் அப்பா பதவியை இராஜினாமா செயவதாக வாக்குறுதி அளித்தாரே என்ன நடக்கப்போகுதோ பார்க்கலாம்.
ReplyDelete