Header Ads



ஷார்ஜாவில் ஒன்றரை வயதுக் குழந்தை மாரடைப்பால் மரணம்

ஷார்ஜா - கேரளாவைச் சார்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஷார்ஜாவில் நடைபெற்றுள்ளது.

 கேரளாவின் அடுர் என்ற இடத்தினைச் சார்ந்தவர் அனில் பாபு. இவர் குடும்பத்தினருடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். அனில்பாபுவுக்கு இரண்டு குழந்தைகள். இவருடைய ஒன்றரை வயதுப் பெண் குழந்தை யான மெர்லின், கடந்த 10 ஆம் திகதி தூக்கத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது. தூங்கப்போகும் போது நல்ல ஆரோக்கியமாக இருந்த அந்தக் குழந்தை காலையில் அசைவற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால் தூக்கத்திலே குழந்தை மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1000 குழந்தைகளில் எட்டுக் குழந்தைகள் பிறக்கும்போதே இருதய நோயுடன் பிறப்பதாக மருத்துவர் சாஜன் கோஷி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 100,000 குழந்தைகள் இவ்வாறான இருதய நோயுடன் பிறப்பதாக் குறிப்பிட்ட சாஜன், கேரளாவில் மட்டும் 4000 குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். inneram

No comments

Powered by Blogger.