முகத்தை வசீகரமாக்க 'நத்தை வைத்தியம்' புதிய சிகிச்சை அறிமுகம் (படம் இணைப்பு)
மனித உடலில் சிறு தூசு படிந்தாலும் அந்த உறுத்தலை சில நொடிகள் கூட தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், முக அழகும், வசீகரமும் பெருக வேண்டும் என்பதற்காக முகத்தின் மீது நத்தைகளை ஊர்ந்துச் செல்ல வைக்கும் நத்தை வைத்தியத்தை ஜப்பானிய பெண்கள் தற்போது தேர்வு செய்துள்ளனர்.
முகத்தின் சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள், சுருக்கம் போன்றவை நீங்கி, இந்த நவீன நத்தை வைத்தியத்தின் மூலம் புதுப்பொலிவுடன் முகம் பிரகாசிப்பதாக இந்த சிகிச்சையை மேற்கொண்ட பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், சருமத்தில் உள்ள இறந்துப் போன செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கி, சருமத்தின் ஈரத்தன்மையையும் இந்த நவீன வைத்தியம் தங்களுக்கு அளிக்கிறது என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே, அழகு சாதன சந்தையில் கிடைக்கும் பல பொருட்கள் நத்தையின் உடலில் சுரக்கும் ஒருவகை திரவத்தில் இருந்து உருவாக்கப்படுவதாகவும், இந்த சிகிச்சையின் மூலம் அந்த திரவம், நேரடியாக சருமத்தில் ஊடுருவி சிறந்த பலனை தருவதாகவும் இந்த சிகிச்சையை அளிக்கும் அழகுக் கலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
வெறும் 5 நிமிடம் மட்டுமே அளிக்கப்படும் இந்த சிகிச்சைக்கான கட்டணமாக சுமார் 6 ஆயிரம் இந்திய ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மக்களை ஏமாற்றுவதற்கு என்னென்ன வேலைகளையெல்லாம் அறிமுகப்படுத்துகின்றார்கள், முகம் வசிகரமாக இருக்கவேண்டுமானால் முதலிம் முகத்தை பாராமரிக்கின்றோம் என்பதற்காக கண்ட நிண்ட கெமிகல்களையும் கிறீம்களையும் பாவிப்பதை நிறுத்தவேண்டும்.
ReplyDelete