சிறைச்சாலையில் நோன்பு பிடிக்கும் மாற்றுமத சகோதரர்கள்
(Inne) இந்தியா - திகார் சிறையில் சுமார் 45 இந்து கைதிகள் ரமலான் நோன்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர்.
இந்நிலையில் திகார் சிறையில் உள்ள கைதிகளில் சுமார் 3500 பேர் இஸ்லாமியர்கள். இவர்கள் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். இவர்களுடன் இணைந்து சுமார் 45 இந்து கைதிகளும் நோன்பு இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த கைதிகளுக்கு பிற நோன்பு பிடிக்கும் கைதிகளுக்கு செய்து தரும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு. சிறை கைதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
.jpg)
Post a Comment