Header Ads



கல்முனை மாநகர சபையினதும், மாடு அறுப்பவர்களினதும் கவனத்திற்கு (படங்கள்)


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை இறைவெளிக்கண்டம் மற்றும் கரைவாகு வெட்டை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் சட்டரீதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாக அப்பகுதியில் வாழும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எம்.முஸ்தபா (மையோன்) முயற்சியினால் உருவாக்கப்பட்ட புதிய உள் வீதியில் கண்ட கண்ட இடங்களில் மாடுகளை அறுத்துவிட்டு அதன் கழிவுகளையும் எலும்புகளையும் அங்கேயேவிட்டுச் செல்கின்றனர்.இதனால் அப்பிரதேசத்தில் சூழல் பாதிக்கப்படுவதுடன் அங்கு வரும் நாய்கள்  அங்குள்ள கழிவுகளையும் எலும்புகளையும் அவ்வீதி பூராகவும் இழுத்துச்சென்று போடுவதால் இவ்வீதியால் போக்குவரத்துச்செய்யமுடியாதளவுக்கு பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது.

அத்துடன் சிலநேரங்களில் அதை அண்டியுள்ள குளத்திலும் கழிவுகளும் எலும்புகளும் வீசப்படுவதனால் அதுவும் அசுத்தமடைவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வீதியில் குறிப்பாக மர்ஹூம் யாசின் ஜீ.எஸ் அவர்களின் வீட்டுக்குப்பின்னால் உள்ள பிரதேசத்தில் கழிவுகளும் எலும்புகளும் தற்போது பெரும் மேடாகக்காட்சியளிக்கின்றது.இவற்றை உடனடியாக அங்கிருந்த அகற்ற கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுப்பதோடு இங்கு மாடுகளை அறுப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பிரதேசத்தை அண்டி வாழும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

3 comments:

  1. இவ்வாறான சட்டவிரோத மாடறுப்புக்கள் இங்கு மட்டுமல்ல நாட்டின் பல முஸ்லிம் பகுதிகளில் அறுக்கப்படுகின்றது. இவ்வாறான நமது அசிங்கமான செயற்பாடுகள்தான் BBS க்கு பக்க பலமாக உள்ளது. முஸ்லிமாகிய நாம் முதலில் இஸ்லாம் படிக்க வேண்டும், திருந்த வேண்டும். அல்லாமல், நம்மை அழிவுகளிலிருந்து அல்லாஹ்வால் பாதுகாக்கவும் முடியாது.
    இவ்வாறான நம் அசிங்கமான நிலையில் மாடறுப்பு தடை சட்டத்தை எவ்வாறு எதிர்க்க முடியும்????

    ReplyDelete
  2. haramana murail panam sambathippadu ivarkalin latchiyam.
    madu aruppu thadai sattam patri ivarkalukku enna

    ReplyDelete
  3. The main factor for the most of the problems Muslims are facing today is having an inadequate knowledge of living with other faith communities in honouring and respecting their rights and values. These kind of indecent behaviours in our community have caused to earn hatred and unpleasantness toward us today.

    ReplyDelete

Powered by Blogger.