இழிபறிக்கு மத்தியில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி விக்னேஸ்வரன்
(எம்.எம்.ஏ.ஸமட்)
எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பன் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு பல்வறு இழிபறிக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னால் ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேலே முன்னால் நீதியரசர் தெரிவு செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நடைபெறவுள்ள 3 மாகாண சபைகளுக்குமான தேர்தலில் தனிதா அல்லது அரசுடன் இணைந்து போட்டியிடுவதா எனத் தீர்மானிக்கும் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment