ஆரிப் சம்சுடினின் 'வெற்றி வழி'
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஏழை மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடினினால் ஆரம்பிக்கப்பட்ட 'வெற்றி வழி' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான குடி நீர் விநியோக விஷ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கமைய, மாளிகைக் காடு மேற்கு புதிய தபால வீதி, கல்முனைக்குடி சாஹிபு வீதியின் குறுக்கு வீதி, கல்முனைக்குடி புதிய நகர குறுக்கு வீதி, கல்முனைக்குடி பள்ளி ஒழுங்கை ஆகிய வீதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடி நீர் வழங்கும் பொருட்டு, இவ்விஷ்தரிப்பு நடவடிக்கை மாகாண சபை உறுப்பினரின் பன்புமுக நதி ஒதக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மாகாண சபியனால் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினுடாக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்
இதேவேளை, மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் வேண்டுகோளின் பிரகாரம் கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருதுப் பிரதேச உள்ளுர் வீதிகள் பல புனரமைப்ப அமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இ;வ்வாறு புனரமைப்பு செய்யப்பட்டு பூர்த்தி நிலையை எட்டியுள்ள இவ்;வீதிகள் விரைவில் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
.jpg)
Post a Comment