அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிரதேச பாடசாலைகளில் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைய தேசிய டெங்கு ஒழிப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
கல்முனை ஸாஹிரா தேசியப்பாடசாலை , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் , சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.பாடசாலை , அல் ஜலால் வித்தியாலயம் , எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயம் , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் என்பவற்றில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த டெங்கு ஒழிப்பு ஊர்வலத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


Post a Comment