பாசிக் குடாவில் திடீர் தீ (படங்கள் இணைப்பு)
(நஷ்ஹத் அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் இன்று (03.07.2013) இரவு 07.30 மணியளவில் திடீர் என ஏற்பட்ட தீயினால் பாசிக்குடா கடற்கரைப்பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது.
இத் தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோட்டங்கள் மற்றும் அரச காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தீயினை கல்குடா பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தெரிவித்தார்.


Post a Comment