மாவை சேனாதிராஜாவுக்கு இந்தியாவின் 'றோ' எதிர்ப்பு வெளியிட்டதா..?
வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சு வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலனை செய்யப்படுவது தொடர்பில் இந்திய அதிருப்தியை வெளியிட்டுள்ளது. TAT இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மாவை சேனாதிராஜா வடமாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு பொறுத்தமானவராக இருக்க மாட்டார் என்று, இந்தியாவின் ரோ எனப்படுகின்ற புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு, இந்தியாவின் எச்சரிப்பையும் மீறி, தமிழ் அரசியல் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைப்பதற்கான செயற்பாட்டினை மாவை சேனாதிராஜா மேற்கொண்டதாக ரோ குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பொது செயலாளர் ஏ.அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் ஆகியோர் மீதான தாக்குதல்களுடன் அவருக்கு தொடர்பிருப்பதாகவும் ரோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சு வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
Post a Comment