Header Ads



குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் முஅல்லிம்களுக்கான கருத்தரங்கு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் முஅல்லிம்களுக்கான கருத்தரங்கு இவ்வருடம் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயல் புஹாரி ஷரீப் மண்டபத்தில் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ்(ரஹ்மானி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களன் சம்மேளனத் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் எம்.ஐ.ஆதம்லெப்பை(பலாஹி), குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் பரிசோதகர்களான ஹாலித் ஹஸன்(பலாஹி),எஸ்.எச்.எம்.சாஜஹான்(பலாஹி),குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் உட்பட உலமாக்கள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 'நவீன கற்பித்தல்அடிப்படையில் முஅல்லிம்கள் அல்குர்ஆனை எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும்' 'பரீட்சைக்க மாணவர்களை திறமைச் சித்தி பெற எவ்வாறு தயார் படுத்துவது' போன்ற தலைப்புக்களில் விசேட விரிவுரைகள் இடம்பெற்றன.


No comments

Powered by Blogger.