மஹியங்களை பள்ளிவாசல் தாக்குதல் - உரிய நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் மஹிந்த
மஹியங்கனை பள்ளிவாசலின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் பள்ளிவாசலுக்குள் பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை, 12 ஆம் திகதி புதிய நீதிமன்ற கட்டிட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்றுள்ளார். இதன்போது மஹியங்களை பள்ளிவாசல் விவகாரம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த, இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். இதை நான் கவனிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரரும், ஊடகச் செயலாளருமான டாக்டர் ஹபீஸ் எமது இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இந்த தகவலை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரரும், ஊடகச் செயலாளருமான டாக்டர் ஹபீஸ் எமது இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

குறைந்த பட்சம் பகிரங்கமாக கூட ஒருநாட்டு தலைவரால் சொல்லமுடியாத அளவு மதவாதிகளின் தலயீடு உள்ளது முஸ்லிம் இனம் இன்று நாதியற்ற ஒருசமூகமாகவே பார்க்கப்படுகிறது.
ReplyDeleteஉலக மோகம், மரன பயம் முஸ்லிம்கலிடம் இருக்கும் வரை அன்னியர்கலின் தாகுதல் இடம்பெட்ரு கொண்டெய் இருக்கும்.
ReplyDeleteTrue
Deleteஇதை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கின்றேன் என்பதற்கும், இதை நான் கவனிக்கின்றேன் என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. முதலாவது சீரியஸ் இரண்டாவது கொமடி இதில் யார் கொமடி பீஸ் என்று சொல்வது....
ReplyDelete