Header Ads



முஸ்லிம் காங்கிரஸிடம் சில கோரிக்கைகள்..!

(அபூ றிஜா)

நடைபெறவுள்ள 03 மாகாண சபை தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டுமென மக்கள் கோரிக்கை

இலங்கை அரசாங்கம் 03 மாகாண சபைக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அறிவிப்பை செய்துள்ள வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அரசியல் உயர்பீட உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்கள் என பலரும் அண்மைக்கால சம்பவங்களின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பதற்காகவும் தனித்தே போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு கோரிக்கை விடுவதற்கு பின்வரும் மூலகாரணங்களை முன்வைக்க கூடியதை அவதானிக்க முடிகிறது.

1.அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்டம்

2.அண்மைக்காலமாக பொதுபலசேனா அமைப்பினால் மேற்கொண்டுவரும் அனாகரிகமான செயற்பாடுகளின் போது  அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தாமல் மௌனம் சாதித்து வருகின்றமை.

3.ஹலால் தொடர்பான விவகாரங்கள்

4.பள்ளிவாசல் உடைப்பு 

5.முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களில் போதிய அக்கறை காட்டாமை.

இது போன்ற காரணங்களினால் முஸ்லிம்கள் ஐயப்பாட்டுடன் இருப்பதுடன் இவ்வரசாங்கம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பங்காளி கட்சிகள் அபிவிருத்தி என்ற மாயையைகாட்டி முஸ்லிம்களின் உரிமையை பறிக்கின்ற விடயங்களில் அக்கறையின்றி செயற்படுவதை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது.இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தன்னுடய அதிருப்தியை வெளிக்காட்டி முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுகின்ற கட்சியென்பதனை அரசுக்கு உணர்த்தியிருக்கின்றது.

கடந்த 2 வருடத்திற்கு மேலாக அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எந்த விதமான நன்மையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அரசியல் தலைவர்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. எது எப்படியிருப்பினும் முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

4 comments:

  1. Yes, your are correct but one question. If we contest alone can we get at least a seat? Ofcoz some of our minister will come with government, ofcoz some of our people will vote to government then how SLMC can get a seat???

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட அக்கட்சியில் இருக்கும் புரோக்கர்கள் விடுவார்களா?

    ReplyDelete
  3. ithu oru slmc kararal eluthappatta vidayam appadi thaniththukkettalum meendum arasangaththudane ottikkolvaarkal ivvalavu kaalamum thaniththukkettuththaane meendm ottiyirukkiraarkal yarukku katha vidurenga Ivankal ellam pathavip piththarkal.

    SLMC ikku vot pannuvathu Haramahavum Irukkalam ithuvarai eththanai Msjidkal Udaikkappattirukkirathu THalaivar?oru murayyavathu Nadalu mandraththil Pesiyirukkiraarkala?

    ReplyDelete
  4. முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இப்போது முஸ்லிகளுக்குத் தேவைதானா?

    ReplyDelete

Powered by Blogger.