Header Ads



முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 3)

'அர் ரஹீகுல் மக்ஃதூம்' ஆரம்பம் முதல் நபித்துவம் (பக்; 60) வரை

1. இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வந்த மக்கா வாசிகளுக்கிடையில் மார்க்கத்துக்கு முரணான அதிக விடயங்களைத் தோற்றுவித்தவன் யார்? 
2. அறியாமைக்காலத்து மக்களிடம் இருந்த நான்கு விதமான திருமண முறைகளையும் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுக. 
3. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் 'ஷைபா' என பெயர் வைக்கப்பட்டிருந்தவர் யார்? 
4. முதன் முதலில் நபியவர்களுக்கு பால் கொடுத்தவர் யார்? 
5. நபியவர்களின் தாயாரின் மரணம் நிகழ்ந்த பயணத்தில், அவர்களோடு இருந்த பணிப்பெண் யார்? அவர்கள்; மரணித்த இடம் யாது?
6. நபி (ஸல்) அவர்கள், தனது சிறு வயதில் தனது குடும்பத்தாரோடு கலந்துகொண்ட யுத்தம் யாது? அந்த யுத்தம் நடைபெறுவதற்கு காரணம் யாது?
7. ஹம்ஸா (றழி) அவர்களை ஒருவகையில் நபியவர்களின் சகோதரர் எனவும் கூறலாம். காரணம் யாது?
8. நபியவர்களின் பெண் மக்களில் நபியவர்களுக்குப் பின்னர் மரணி;தவர்கள் யார்? 
9. 'மக்காவாசிகளாயினும், வெளியூர்வாசிகளாயினும் யாரும், யாருக்கும் அநியாயம் இழைக்கக்கூடாது' என ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அவ்வொப்பந்தத்தின் பெயர் யாது? அதனைப் பற்றி நபியவர்கள், நபித்துவத்திற்குப் பின் கூறியது யாது? 
10. நபி (ஸல்) அவர்கள் எத்தனை வயது சிறுவராக இருக்கும்போது அவர்களது நெஞ்சு பிளக்கப்பட்டது? அது குறித்த ஹதீஸை அறிவிப்பவர் யார்? ஆதார நூல் எது? 
11. நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் பாட்டன் அப்துல் முத்தலிப் மரணித்தார்? எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள்; என்பவற்றைக் குறிப்பிடுக. அப்துல் முத்தலிப் எங்கு மரணித்தார்?

12. பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கு சரி எனவும் பிழையான கூற்றுக்கு x எனவும் அடையாளமிடுக:

1. அரேபியர்கள் நபியவர்களுக்கு முன்பிருந்தே கத்னா முறையை அறிந்திருந்தார்கள். (  )
2. அறேபியர்களின் வழக்கப்படியே நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. (  )
3. துவைபா எனும் பெண்மணி ஹம்ஸா (றழி) அவர்களுக்கும் பாலூட்டியிருந்தார்கள்.(  )
4. இப்றாஹீம் அலை) அவர்கள் ஹர்ரான் எனும் ஊரை தஃவாவின் மையப் பகுதியாக வைத்து அதனைச் சூழவுள்ள பகுதியிலிருந்த மக்களை இறைவன் பக்கம் அழைத்தார்கள். (   )
5. 'கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக்கொண்டால் கற்கள் அழுத்தாமல் இருக்கும்'; என நபி (ஸல்) அவர்களிடம் ஜாபிர் (றழி) அவர்கள்கூறினார்கள். (  )

அணுசரனை:
அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்புக்கான  உலக கலாச்சார நிலையம்

ஏற்பாடு:
தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்

முஸாபகது ரமழான் போட்டி அறிமுகத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்க..!
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_9393.html

No comments

Powered by Blogger.