Header Ads



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிறைக்குழுவின் அறிவிப்பு

ஹிஜ்ரி 1434.08.23 (2013.07.03) 
ஊடக அறிக்கை 
ரமழான்  தலைப்பிறை

இஸ்லாமிய பிறை மாதத்தைத் தீர்மானிப்பதற்கான கூட்டம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் பிரதி மாதமும் நடைபெற்று வருகிறது. வழமை போன்று ஷஃபான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் கூட்டமும் ஹமீதிய்யா மண்டபத்தில் சென்ற 09.06.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை திங்கள் இரவு நடைபெற்றது. அன்றைய தினம் ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறையைக் கண்டதற்கான சாட்சிகள் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் கிடைக்கப் பெறவில்லை. அதனால் ரஜப் மாதத்தை முப்பது (30) நாட்களாக பூர்த்தி செய்து ஷஃபான் மாதத்தின் முதல் நாளை 11.06.2013 செவ்வாய்க்கிழமை ஆரம்பிப்பது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் பிரகடனமும் செய்யப்பட்டது. அதை நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் அறிவர்.  

அவ்வகையில் புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம் 'இன்ஷா அல்லாஹ்' எதிர்வரும் 09.07.2013 செவ்வாய்க்கிழமை (ஷஃபான் 29) மாலை நடைபெரும். அன்றைய நாள் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு நாட்டு முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வதுடன் தமது பகுதிகளில் பிறை பார்க்க மக்களை ஆர்வமூட்டுமாறும் மஸ்ஜித் நிருவாகிகளையும் அன்போடு வேண்டுகிறது. மேலும் அன்றைய தினம் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் அருள் நிறைந்த ரமழான் மாதத்தை ஆரம்பித்து அதன் பாக்கியத்தை முழுமையாக அடைந்து கொள்ள முயற்சிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கனிவாக வேண்டிக்கொள்கிறது. 

....................................
அஷ்-ஷைக் ஏ.எம்.ஏ. அஸீஸ் 
செயலாளர் 
பிறைக்குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.