Header Ads



தேசிய நலனில் முஸ்லிம்கள் பார்வையாளரா..? பங்காளரா..?? (பகுதி-1)

(அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) 
பணிப்பாளர்: ஸம்ஸம் கலாபீடம்)

கடந்த மூன்று தசாப்தங்களாக எமது தேசத்தின் சமயம் சமாதானம் பாதுகாப்பு கச்வி  பொருளாதாரம் என சகல துறைகளையும் காவு கொண்டிருந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்குப்  பின்னரான இலங்கைத் தேசத்தைக்  கட்டியெழுப்புவதில் பல பாரிய சிக்கல்கள் தடைக்கற்களாக  உள்ளன. அவற்றுல் பிரதான தடைக்கல்லாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை நாம் அடையாளம் காணலாம். இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதான சகவாழ்வு கிட்டிய காலத்தில் உதயமாகும் என எவராலும் எதிர்வு கூற முடியாதளவு கள  நிலமை காணப்படுகிறது. 

முஸ்லிம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள், இவர்கள் இந்த நாட்டை திட்டம் தீட்டி ஆக்கிரமிக்க முணைகின்றனர், நாட்டில் பல பாகங்களிலும் திட்டமிட்டு பள்ளிவாயல்களை கட்டி வருகிறார்கள், இந்த நாட்டில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கின்றன, இந்த நாட்டு பௌத்தர்களை இவர்கள் திட்டமிட்டு மதம் மாற்ற முணைகின்றனர், அரபு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர் பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப் படுகின்றனர். அடிப்படைவாத தீவிரவாத அல்காயிதா தாலிபான் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புடை யவர்கள் இங்கு இருக்கிறார்கள் முஸ்லிம்களுக்கு வரலாறில்லை அவர்கள் வந்தேறு குடிகள் .இலங்கையின் தேசிய நலனில் அவர்களுக்கு பங்கில்லை. என்ற இந்த பிரச்சாரங்களை சமூகத்தினது எதிர்குரலாக நாம் பார்க்கவேண்டியதில்லை அதற்கான சரியான பதிலை நாம் வழங்கியுள்ளோமா? என்றுதான் இத்தருணத்தில் நாம் சிந்திக்கவேண்டியள்ளது. 

கடந்தகால முஸ்லிம்கள் இது பற்றி சிந்தித்துள்ளனர். எனவேதான் தேசிய நலனில் ஒரு காத்திரமான பாத்திரத்தை அவர்களால் ஆற்ற முடிந்துள்ளது. இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வை பேணுவதிலும் ஆரம்பகால முஸ்லிம்கள் வகித்த பங்களிப்புக்கள் மிக முக்கியமானவை. 

இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம்

அரேபியாவில் இஸ்லாம் தோன்ற முன்னரே அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. எனினும் இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரம் எனும் வரையரையானது கி.பி-630 இல் இருந்து அரேபியாவில் இருந்ந்து நபி (ஸல்) அவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைத்த வஹ்ஹாப்  பின் அபி ஹப்ஸா என்ற நபித்தோழரின் வருகையும் அதனுடன் இலங்கையில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் இலங்கை முஸ்லிம்களது வரலாறு ஆரம்பிப்பதற்கான அடிப்படைகளாகும். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களும் தமது மூதாதையரின் வழித்தோன்றலில் நின்று வணிகத்தில் செல்வாக்குப் பெற்றனர். உள்நாட்டு வர்த்தகம் முதல் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட சர்வதேச வணிகத்தில் முஸ்லிம்களே முன்னிலையில் இருந்தனர். 

ஆரமபத்தில் ஆடைகள் உணவுப் பதார்த்தங்கள் என்பவற்றை இலங்கைக்கு சந்தைப்படுத்தி வந்த அரேபியர்கள் இலங்கையிலிருந்து மிளகு கறுவா ஏலம் பாக்கு கராம்பு வெற்றிலை புகையிலை என்பவற்றைத் தம் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இஸ்லாத்தின் வருகையிடன் இவர்களது இவர்களது பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. வியாபாரத்தில் சில வரையறைகள் பேணப்பட்டன. ஆகுமானவைகள் தடுக்கப்பட்டவை என மதிப்பீடுகள் செய்யப்பட்டன. மது வட்டி என்பன முற்றாக தடவிர்க்கப்பட்டன. இதனால் இவர்களது வியாபாரமும் வாழ்வும் செழித்த்து. அரேபியர்கள் தம் நேர்மையான வியாபாரத்தின் காரணமாக இலங்கை மன்னர்களிடமும் மக்களிடமும் அவர்கள் நனமதிப்பை பெற்றனர்.

ஆரம்ப கால அரேபிய முஸ்லிம்களது வியாபாரம் ஏற்றுமதி வியாபாரமாக இருந்தது. பெறுமதிமிக்க ஆடைகளையும் தம் நாடுகளில் விளையும் உணவுப் பொருட்களயும் இங்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துவதும் இங்கிருந்து வாசனைத் திரவியங்கள் உணவு வகைகளைத் தமது நாடுகளுக்கு ஏற்றமதி செய்வதும் இவர்களது பிரபல்யம் பெற்ற வியாபாரமாக இருந்தது. மட்டுமன்றி உள் நாட்டில் கூட்டம்  கூட்டமாக வியாபாரக் குழுக்களாக சென்று தமது பொருட்களை சந்தைப்படுத்தினர். இவர்களது நற்பண்புகளும் கலப்படமோ கலவோ அற்ற வியாபார அமைப்பும் வாய்மையும் பழக்க வழக்கங்களும் அவ்வப்பிரதேச மக்களைக் கவர்ந்தன. இதனால் தலைவர்களிடமும் மன்னர்களிடமும் நன்மதிப்பை பெற்றனர். இம் மன்னர்கள் இவர்களுக்கு நிலங்களை வழங்கினார்கள். இங்கு குடியேற்ற அரேபியர் இந் நாட்டுப் பெண்களைத் திருமணம் முடித்தமையால் அது குடும்ப உறவாகப் பரிணமித்த்து. இதன் விளைவாக நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் பரந்து வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

  இவ்வாறு வளமாக வியாபாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அரேபியர் 1505 ஆம் ஆண்டு அரேபியக் கடலில் போர்த்துக்கேயர்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அரேபிய வியாபாரிகள் தப்பிப்பதற்காக இந்து சமுத்திரம் வழியாக இலங்கையில் வந்து ஒதுங்கிக் கொண்டார்கள். போர்த்துக்கேயர்கள் இச்சம்பவத்தின் காரணமாக தற்செயலாக இலங்கை வந்தனர். இலங்கையைக் கைப்பற்றித் தமது வர்த்தக ஆதிக்கத்த்தை நிலை நாட்ட முனைந்தனர். 

ஏற்கனவே இங்கு வர்த்தகத்தில் வளமிக்கவர்களாக இருந்த முஸ்லிம்களுக்கும் புதிதாய் வந்த போர்த்துக்கேயர்களுக்குமிடையில் தமது வர்த்தக மேலாண்மையை பதாதுகாப்பதற்காக வேண்டி கடலிலும் தரையிலும் இரு தரப்பகனரும் மோத வேண்டிய நிலமை ஏற்பட்டது. 17 கப்பல்களைக் கொண்ட ஒரு படையுடனும் ஒரு இராணுவ பிரிவுடனும் ஏராளமான பீரங்கிகளுடனும் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கீசரை முதன் முதலாக எதிர்த்தவர்கள் முஸ்லிம்களேயாவர். முஸ்லிம்பகளுக்கும் போர்த்துக்கேயர்களுக்குமிடையிலான இம் மோதலில் கரையோர முஸ்லிம்களின் அவர்களால் முழுமையாக அழிக்கப்பட்டன. மட்டுமன்றி முஸ்லிம்களது வியாபார பொருட்களுக்கு பெருமளவு பெரும் சேதங்களை ஏற்படுத்தினர். இதனால் முஸ்லிம்கள் சீதாவாக்க இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னவுடன் இணைந்து போர்த்துக்கீசருக்கு எதிராக போரிட்டனர். இப் போரிலும் கூட போர்த்துக்கீசரே வெற்றி பெற்றமையினால் தெற்கு கரையோரத்தை ஆக்கிரமித்த போர்த்துக்கீசர்கள் முஸ்லிம்கள் மீது சுமக்க முடியாத வரிகளை விதித்தனர். போதாமைக்கு 1926 இல் தமது ஆட்சிப்பரப்பிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட 4000 முஸ்லிம்கள் கண்டியை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதே முறையான பாதிப்பே வடக்கு முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கீசரால் ஏற்ப்ட்டது.  

தொடர்ந்தும் 1658 இல் ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பினால் இலங்கையிலட முஸ்லிம்கள் மேலும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பொருளாதார ரீதியில் முஸ்லிம்களைச் சுரண்டுவதில் போர்த்துக்கீசரை விட மிக தீவிரமாக செயற்பட்டனர். இவர்களது தீவிரமான இப்போக்கின் காரணமாக கிட்டத்தட்ட மூன்று நுற்றாண்டுகளாக தெற்கு முஸ்லிம்கள் சமூக பொருளாதார ரீதியில் பின் தள்ளப்பட்டார்கள்.       

No comments

Powered by Blogger.