Header Ads



தாய்ப்பால் குடித்த குழந்தை கடித்துவிட்டது - 90 முறை கத்திரியால் குத்திய தாய் (படம்)


தாய்ப்பால் ஊட்டும் போது கடித்த குழந்தையின் முகத்தில் 90 முறை கத்தரிக்கோலால் தாய் குத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. முகமெல் லாம் வீங்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சுசௌ  நகரை சேர்ந்த ஒரு பெண்ணின் 8 மாத ஆண் குழந்தை ஜியோ போ. சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஜியோ போ வீட்டில் ரத்த வெள்ளத்தில்  கிடந்தது. அதன் முகமெல்லாம் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் மாமா அதனை உடனடியாக மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார்.

உயிருக்கு போராடிய குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு 100க்கும் மேற்பட்ட தையல்கள்  போடப்பட்டன. தற்போது அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின் றனர். இது குறித்து விசாரித்தபோது,  குழந்தையை தாயே கத்தரியால் குத்தியது தெரியவந்தது. குழந்தை பால் குடிக்கும் போது அடிக்கடி கடித்து வைத்துள்ளான். இதனால் கோபம்  அடைந்த அவனது தாயார் ‘கடிப்பியா, கடிப்பியா’ எனக் கேட்டப்படியே குழந்தையின் முகத்திலும், உடலிலும் நறுக் நறுக் கென்று கத்தரியால்  குத்தியுள்ளார் என்று குழந்தையின் மாமா தெரிவித்தார். முகத்தில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திரி குத்து விழுந்துள்ளது. அந்த பெண்  மனநிலை பாதித்தவரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சீனாவில் பல பெண்களுக்கு மனநோய் காணப்படுவதாகவும், அவர்கள் போதுமான சிசிக்சை பெறாமல் இருப்பதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட  ஆய்வில் தெரியவந்தது.இந்நிலையில், 8 மாத குழந்தையை தாய் 90 முறை கத்தரியால் குத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 comments:

  1. NICHCHAYAM AVEL PETRA THAAYAKE IRUKKE MUDIYATHU.THIVIRA MAAKE VISAARITHAAL UNMAI VELIPPADUM.

    ReplyDelete

Powered by Blogger.