தார் அல் பிர் அமைப்பினால் ஏறாவூர் றூபி முகைதீன் கிராமத்தில் 70 கிணறுகள்
(ஸப்றாஸ்)
ஏறாவூர் நகர சபையின் நகர முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் றூபி முகைதீன் கிராமத்தில் 70 கிணறுகள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டு கிணறுகளை கையளித்தார். அத்தோடு பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லிம், நகர சபை உறுப்பினறும் முன்னால் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினறுமான மர்ஹும் றூபி முகைதீன் அவர்களின் புதல்வருமான அமீன் இஸ்ஸத் ஆஸாத், நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், தார் அல் பிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பளர் ஐ.இஸ்ஹாக் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதவேளை மௌலானாவின் வேண்டுகோளின் பேரில் தார் அல் பிர் அமைப்பினால் அன்மையில் ஏறாவூர் அப்துல் மஜித் மாவத்தையில் 50 கிணறுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீராகேணி பிரதேசத்தில் 100 கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டுவருதாகவும் மாவட்ட இணைப்பாளர் ஐ.இஸ்ஹாக் தெரிவித்தார்.

Post a Comment