இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த காத்தான்குடி மாணவி (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு –காத்தநகர் வரலாற்றில் முதன் முறையாக மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை ஜப்பான் புக்கோக்கா நகரில் இடம்பெற்ற 52 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றிய 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைதந்த 2012ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற சாதனையாளர் முகம்மட் லாபீர் பாத்திமா நிபாஸத்தை பாராட்டும் நிகழ்வும் விஷேட இப்தார் நிகழ்வும் 24-07-2013 புதன்கிழமை மாலை காத்தான்குடி மீரா பாலிகா பெண்கள் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம்இஸ்மாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பரீட் பவுண்டேஸன் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீஎம்.ஹாலித் ஜேபி ஆகியோரினால் சாதனையாளர் மாணவி எம்.எல்.எப்.நிபாஸத்துக்கு விஷேட பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.



Post a Comment