Header Ads



மொபைல் போன்களை 50 சதவீதம் அளவிற்கு சார்ஜ் செய்தால் போதும் - ஆய்வாளர்கள்

மொபைல் போன்களை, 50 சதவீதம் அளவிற்கு சார்ஜ் செய்தால், பாட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என, லண்டனை சேர்ந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மொபைல் போன் தொழில் நுட்ப நிபுணர், எரிக் லிமெர் கூறியதாவது: மொபைல் போன் பாட்டரிகளை, 100 சதவீதம் சார்ஜ் செய்தால், போன் சூடாகி விடுவதுடன், பாட்டரியின் ஆயுட்காலம், கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், பாட்டரியை பாதி அளவிற்கு, அதாவது, 50 சதவீத அளவிற்கு சார்ஜ் செய்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். மொபைல் போன் பாட்டரிகளை, 15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து, 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், பராமரித்து வந்தால், வருடம் ஒன்றுக்கு, பாட்டரியின் திறன், 20 சதவீதம் குறையும். இதனால், பாட்டரியின் ஆயுட்காலமும் விரைவில் முடிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.