Header Ads



தாத்தாவின் துப்பாக்கியால் 2 வயது சகோதரியை சுட்டுக்கொன்ற 5 வயது சிறுவன்

அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசிக்கும் முதியவர் தனது வீட்டில் கைத்துப்பாக்கியை சுத்தும் செய்துக் கொண்டிருந்தார். 

இடையில், வேறு ஏதோ வேலையாக அவர் பக்கத்து அறைக்கு செல்ல நேர்ந்தது. துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பியதை மறந்துப்போன அந்த முதியவர் அதை அங்கேயே வைத்துவிட்டு பக்கத்து அறைக்கு சென்றார். 

அப்போது அங்கு வந்த அவரது 5 வயது பேரன் அந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக தனது 2 வயது சகோதரியை நோக்கி நீட்டி 'டிரிக்கரை' அழுத்தினான். 

துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு சிறுமியின் முகத்தை துளைத்து வெளியேறியது. ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். 

பலியான சிறுமி மற்றும் அந்த சிறுவனின் பெயர் விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதத்தை கையாளும் போது பெரியவர்கள் கவனக்குறைவாக இருப்பதே இதுபோன்ற அசம்பாவிதத்திற்கு காரணம் என்று முதியவர் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் ஓர் பெண்மணி கூறுகிறார்.

No comments

Powered by Blogger.